காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை! தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர மறுத்துக் கருநாடகம் பிடிவாதம்!

1 Min Read

பெங்களூரு, ஜூலை 9- கருநாடகாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை மிகவும் தாமதமாக தொடங் கியது. இதனால் காவிரியின் குறுக்கேயுள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகள் வறண்டு காணப்பட்டன.

இந்நிலையில் கடந்த 5.7.2026 அன்று இரவு முதல் கருநாடகாவில் ஷிமோகா, ஹாசன், சிக்கமகளூரு, உடுப்பி, உத்தர கன்னடா உள்ளிட்ட மலநாடு பகுதியை சேர்ந்த‌ மாவட் டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணா, துங்க பத்ரா, நேத்ராவதி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

குடகு மாவட்டத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக் காவிரி, பாக மண்டலா, மடிகேரி உள்ளிட்ட இடங்களிலும் கடந்த 3 நாட்களாக‌ கனமழை பெய்து வருகிறது. குடகு மாவட்டத்தில் கடந்த 7.7.2026 அன்று 165 மி.மீ மழை பதிவானது. அன்று தொடங்கி நேற்று (8.7.2026) இரவு வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் கடந்த 24 மணி நேரத்தில் மடிகேரி வட்டத்தில் உள்ள பெங்கூரு கிராமத்தில் 211.5 மி.மீ மழை பதிவானது.

இரவும் பகலும் விடாமல் கொட்டி தீர்த்த கனமழையால் காவிரி ஆற்றிலும் அதன் துணை நதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ண ராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *