திருப்பரங்குன்றம் மலையில் மீண்டும் அளவீடு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி

1 Min Read

மதுரை, ஜூலை 4- திருப்பரங்குன்றம் மலையை மீண்டும் அளவீடு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு:

திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதையும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும், தொல்லியல் துறையிடம் அனுமதி பெற்ற பிறகே திருப்பரங்குன்றம் மலை மீது ஏற அனுமதிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தேன்.

இதை விசாரித்த நீதிபதிகள், என் மனுவை அதிகாரிகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டார். இருப்பினும் என் மனு மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.சிறீமதி அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில், திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்ததில், சில இடங்களில் முரண்பாடுகள் இருப்பது போல் தோன்றுகிறது.

எனவே மலைப்பகுதியை மீண்டும் அளவீடு செய்ய வேண்டும். சுமார் 5 ஏக்கர் பரப்பளவு பகுதியை அளவீடு செய்ய வேண்டும். அதற்கு 4 வாரங்கள் கால அவகாசம் வேண்டும் எனக் கூறப்பட்டது. பின்னர் நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலையை முழுவதுமாக அளவிடும் பணி 4 வாரங்களுக்குள் முடிக்கப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப் பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் லண்டன் பிரிவியு கவுன்சிலின் உத்தரவுக்கு பிறகு மலை மீது ஏதேனும் விரிவாக்கப் பணிகள் நடைபெற்றிருந்தால், அது தொடர்பான விவரங்களையும் அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 14-க்கு தள்ளி வைத்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *