சென்னை, மே 30-–தமிழ்நாட்டில் தினம் தினம் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இங்கே சட்டம் ஒழுங்கு இருக்கா இல்லையான்னு மக்களுக்கு சந்தேகம் வருது என்று குற்றம்சாட்டி எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பதிவு வருமாறு:
சட்டம்-ஒழுங்கு
கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற்படுத்துகிறது.
இப்படி தொடர்ச்சி யாக நடக்குற குற்றச் சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ் நாட்டுல சட்டம் ஒழுங் குன்ற ஒன்னு இருக்கா இல்லை யான்னு மக்களுக்கு சந்தேகம் வருது.
இந்த #Sofa Model அரசு அமைஞ்சது முதல், கொலை – கொள்ளை ––- பாலியல் வன்கொடு மைன்னு இப்படி குற்றங் கள் நடக்காத நாளே இல்ல.
தேர்தல் பிரச்சாரத்துல பக்கம் பக்கமா பேப்பர் வச்சு, சட்டம் ஒழுங்கு பத்தி வாய்கிழிய பன்ஞ் டயலாக் பேசினவர், முதலமைச்சர் ஆனதும் Deep Sleep Mode–க்கு போய்ட்டாரு.
பெண்கள் பாதுகாப்புக் காக நீங்க அறிவிச்ச சிங்கப் பெண்கள் படையோட தொடக்க விழாவை, கடைசி நேரத்துல ரத்து செஞ்சு இருக்கீங்க.
நிகழ்ச்சியை தள்ளி வைச்சு இருக்கீங்களா, இல்ல அந்த முயற்சியையே தள்ளிவச்சுட்டீங் களானு மக்கள் கேட்கிறாங்க.
சிங்கப்பெண் படைனு பேரையும், சீருடையையும் மாத்துறது தான் மாற்றமா? இல்ல, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா?
நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது சி.எம். சார். இவ்வாறு தனது ட்விட்டர் பதிவில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
