சொத்து வரி : சிறப்பு முகாம்
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சொத்து வரி வசூலிக்க இன்று முதல் சிறப்பு முகாம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
சூரியனை விட்டு விலகிப் போகும் பூமி!
வருகிற 6-ஆம் தேதி இரவு 11 மணியளவில் Aphelion என்ற அரிய வானியல் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நாளில், பூமி சூரியனிலிருந்து ஆண்டிலேயே அதிகபட்ச தூரமான சுமார் 152 மில்லியன் கி.மீ. தொலைவில் இருக்கும். இந்த நிகழ்வால் பருவநிலையிலோ, அன்றாட வாழ்விலோ எந்த பாதிப்பும் ஏற்படாது. இது ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் இயல்பான வானியல் நிகழ்வாகும். பூமி சூரியனிலிருந்து சராசரியாக 149.6 மில்லியன் கி.மீ. தூரத்தில் இருக்கும்.
நடைப்பயிற்சியின் போது
இந்த அறிகுறிகள் இருக்கா?
இந்த அறிகுறிகள் இருக்கா?
நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது இந்த அறிகுறிகள் தெரிகிறதா?
lசீக்கிரமாக சோர்ந்து போனால் உடலில் ஊட்டச்சத்து குறைவாக இருப்பதையும், சரியான தூக்கமில்லாமல் இருப்பதையும் குறிக்கிறது.
lகால்கள் மரத்துப் போனால், நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு முக்கியமான பி12 குறைபாடு இருப்பதை குறிக்கிறது.
lமூச்சு வாங்குதல், மார்பு பிடிப்பதாக இருப்பது போல் தோன்றுதல் இதயம் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்த்துகின்றன.
உக்ரைன்-ரஷ்யா போர்
6 லட்சம் ராணுவ வீரர்கள் பலி
6 லட்சம் ராணுவ வீரர்கள் பலி
4 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் ரஷ்யா – உக்ரைன் போரால் இதுவரை சுமார் 6 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஸ்ட்ராடஜிக் அண்ட் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ்’ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ரஷ்ய தரப்பில் மட்டும் 4,50,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மறுபுறம் உக்ரைன் தரப்பில் 1,50,000 வீரர்கள் கொல்லப்பட்டும், 6,25,000 பேர் காயமடைந்தும் உள்ளனராம்.
