ஆன்லைன் எச்சரிக்கை
தர்மபுரி மாவட்டம் என்ன அகரம் பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூபாய் 35 லட்சத்தை இழந்த நிலையில் தற்கொலை.
ஆச்சரியம் ஆனால் உண்மை
ஹாங்காங் இல் சோபியா என்ற ரோபோ மனிதர்களைப் போலவே ராகம் பாடி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதிக ஒலி ஆபத்து
உத்தரப் பிரதேசத்தில் திருமண ஊர்வல இசை நிகழ்ச்சியில் அதிக ஓசையால் 140 கோழிகள் உயிரிழப்பு
கடவுள்களின் பரிதாப நிலையை பாரீர்!
மீட்கப்பட்ட கடவுள்கள்: இந்தியாவில் இருந்து திருடப்பட்ட 657 சாமி சிலைகளை திருப்பி அனுப்பியது அமெரிக்கா.
ஒத்துழைக்க மறுப்பு
மேற்குவங்க வாக்காளர்கள் தேர்தல் வாக்கெடுப்புக்கு பின்னர் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்கு ஒத்துழைக்க பெரும்பாலோர் மறுப்பு என்று ஆக்சிஸ் மை இந்தியா கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றம் உத்தரவு
இஸ்ரோவில் 20 ஆண்டு காலமாக பணியாற்றிய தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு.
விமானக் கட்டண உயர்வு
விமானக் கட்டண உயர்வுக்கு எதிரான வழக்கில் ஒன்றிய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாதது ஏன் என்று உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு கேள்வியை எழுப்பி விளக்கம் கேட்டு உள்ளது.
நீதிபதிகள் இடமாற்றம்
தமிழ்நாடு முழுவதும் 84 நீதிபதிகளை இடமாற்றம் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
