பெங்களூருவில் ஏழாவது உலக திருக்குறள் மாநாடு ஜூலை 5ஆம் தேதி நடைபெறுகிறது

1 Min Read

பெங்களூரு, ஜூலை 01– பெங்களூருவில் உள்ள‌ செயிண்ட் ஜோசப் பல்கலைக் கழகத்தில் வரும் 5ஆம் தேதி 7ஆவது உலக திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது.

இது குறித்து திருவள்ளு வர் சங்க தலைவர் எஸ்.டி.குமார் பெங்களூருவில் நேற்று (30.6.2026) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: செயிண்ட் ஜோசப் பல்கலைக்கழகம், தாய் மொழி கூட்டமைப்பு மற்றும் திருவள்ளுவர் சங்கம் இணைந்து வரும் 5ஆம் தேதி 7ஆவது உலக திருக்குறள் மாநாட்டை நடத்துகிறது.

செயிண்ட் ஜோசப் பல்கலைக் கழகத்தில் நடை பெறும் இந்த மாநாட்டை த‌மிழ்நாடு அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு தொடங்கி வைக்கிறார்.

இம்மாநாட்டில் இஸ்ரோ முன்னாள் திட்ட‌ இயக்குநர் மயில்சாமி அண்ணாத் துரை, கன்னட ரக்சன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கவுடா, செயிண்ட் ஜோசப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் விக்டர் லோபோ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

20-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் திருக்குறள் தொடர்பான தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். இ வ்வாறு அவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *