ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரயில்வேயில் காலியாக உள்ள பாராமெடிக்கல் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 590 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.45 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பது குறித்த தகவல்களை இங்கு காணலாம்.
இந்திய ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை ஆர்.ஆர்.பி எனப்படும் ரயில்வே தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. லோகோ பைலட், குரூப் டி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை ரயில்வே வாரியம் அண்மையில் வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசு நிறுவனம் என்பதால் ரயில்வேயில் வேலை செய்ய வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான தேர்வர்களின் லட்சியமாக உள்ளது.
இதற்காக ரயில்வே நடத்தும் தேர்வு அறிவிப்பை எதிர்பார்த்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில்தான், ரயில்வேயில் காலியாக உள்ள பாராமெடிக்கல் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
செவிலியர் கண்காணிப்பாளர் – 365 காலியிடங்கள்
டயாலிசிஸ் டெக்னிஷியன் – 01, ஹெல்த் & மலேரியா ஆய்வாளர் (நிலை III) – 43, ஆடியோலாஜிஸ்ட் மற்றும் ஸ்பீச் தெரபிஸ்ட் – 01, பார்மாசிஸ்ட் – 118, ரேடியோகிராபர் / எக்ஸ்-ரே டெக்னிஷியன் – 25, ஈசிஜி (ECG) – 04, கண் பரிசோதகர் (Optometrist) – 02, ஆய்வக உதவியாளர் (நிலை II) – 31 என 590 காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். செவிலியர் (நர்சிங்) பணியிடங்களுக்கு இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து செவிலியர் படிப்பு முடித்து இருக்க வேண்டும். மருந்தாளுநர் பதவிக்கு பார்மசி பிரிவில் கல்வித்தகுதி பெற்று இருக்க வேண்டும். டிஜிஎன்.எம்/ பிஎஸ்சி செவிலியர் உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: செவிலியர் கண்காணிப்பாளர் பணிக்க்கு 20 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். இதர பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 33 ஆகும். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
ஊதியம்: செவிலியர் கண்காணிப்பாளர்-
ரூ.44,900/-, டயாலிசிஸ் தொழில்நுட்பணர் –
ரூ.35,400/-, ஹெல்த் & மலேரியா ஆய்வாளர் (நிலை III) –
ரூ.35,400/-, ஆடியோலாஜிஸ்ட் மற்றும் ஸ்பீச் தெரபிஸ்ட் –
ரூ.35,400/-, பார்மாசிஸ்ட்- ரூ.29,200/-, ரேடியோகிராபர் / எக்ஸ்-ரே டெக்னிஷியன் – ரூ.29,200/-, ஈசிஜி (ECG) டெக்னிஷியன் – ரூ.25,500/-, கண் பரிசோதகர் – ரூ.25,500/-, ஆய்வக உதவியாளர் (நிலை II) – ரூ.21,700/-
தேர்வு முறை: கணினி வழியிலான இணைய வழித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள தேர்வர்கள் தேர்வு அறிவிப்பை படித்து உறுதி செய்த பிறகு இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.250 கட்டணம் ஆகும். விண்ணப்பிக்க வரும் 14.10.2026 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பைப் படிக்க: https://www.rrbapply.gov.in/
