வரவேற்கத்தக்க நியமனம்! அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழு தமிழ்நாடு அரசு ஆணை

2 Min Read

சென்னை, ஜூன் 30– இஸ்ரோ மேனாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய பாடத் திட்ட வடிவமைப்புக் குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மயில்சாமி அண்ணாதுரை
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர் களுக்கான பாடத் திட்டம் படிப் படியாக மாற்றியமைக்கப்பட உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் இஸ்ரோ தலைவர் நாராயணன், கிரிக்கெட் வீரர் அஸ்வின், விஞ் ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் அடங்கிய புதிய பாடத் திட்ட வடிவமைப்பு உயர் நிலைக் குழு, வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு, மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை ஆய்வு செய்தது. ஆசிரியர்கள், பெற்றோர், கல்வியாளர்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் பெற்றது. அதன் அடிப்படையில், பள்ளிக்கல்வி மேம்பாட்டுக்கான பரிந்துரைகள் மற்றும் புதிய பாடத் திட்டத்துக்கான அறிக்கையை தயாரித்து அரசிடம் வழங்கியது. அதைத் தொடர்ந்து, முதல்கட்டமாக நடப்பு கல்வி ஆண்டில் 1 முதல் 3ஆம் வகுப்பு வரை புதிய பாடத் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தவெக அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், இஸ்ரோ மேனாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலை மையில் புதிய பாடத் திட்ட வடிவமைப்புக் குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய பாடத்திட்ட வடிவமைப்பு குழு

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறைச் செயலர் சந்திரமோகன் வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது: பள்ளி பாடத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் புதிய பாடத் திட்ட வடிவமைப்புக் குழுவை அரசு அமைத்துள்ளது. இதன் தலைவராக இஸ்ரோ மேனாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செயல்படுவார். விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், சென்னை பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியை ரீட்டா ஜான், சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் பேராசிரியர் சுதந்திரமுத்து உள்ளிட்ட 14 பேர் உறுப்பினராக இருப்பார்கள். மாநிலக் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குநர் இக்குழுவின் உறுப்பினர் – செயலராக செயல்படுவார். உறுப்பினர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுகள் ஆகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தற்போது 1 முதல் 3ஆம் வகுப்பு வரை புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் புதிய குழு, 4ஆம் வகுப்பு முதல் புதிய பாடத் திட்டத்தை தயாரித்து அரசிடம் சமர்ப்பிக்கும். குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் 4ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிப்படியாக புதிய பாடத்திட்டம் பின்பற்றப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *