தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு இடைக்கால ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியீடு!

1 Min Read

சென்னை, ஜூன் 20- தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான விதிகள் இன்னும் முழுமையாக வகுக்கப்படாத நிலையில், அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்ட விதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை, ஓய்வுபெறும் ஊழியர்களின் உடனடி வாழ்வாதாரத்திற்கு ஆதரவ ளிக்கும் வகையில் இந்த இடைக்கால மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.

ஓய்வூதியக் கணக்கீடு
எவ்வாறு அமையும்?

இடைக்கால மாதாந்திர ஓய்வூதியத் தொகை பின்வரும் முறையில் கணக் கிடப்பட்டு வழங்கப்படும். ஊழியரின் கடைசி அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ. 10,000 — இந்த இரண்டில் எது அதிகமோ, அந்தத் தொகை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.அந்தத் தொகையுடன் 50 சதவீதம் அகவிலைப்படியும் (DA) சேர்த்து மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படும்.

குடும்ப ஓய்வூதிய விவரங்கள்

ஓய்விற்குப் பின் மரணம்: ஓய்வு பெற்ற பிறகு ஊழியர் மரணமடைந்தால், அவர் பெற்று வந்த இடைக்கால ஓய்வூதியத் தொகையில் 60 சதவீதம் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும்.

பணியின் போது மரணம்: அரசு ஊழியர் பணியில் இருக்கும்போதே மரணமடைந்தால், தகுதியான குடும்ப உறுப்பினருக்குத் தனி இடைக்கால குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் இறுதி விதிகள் அறிவிக்கப்பட்டவுடன், இந்த இடைக்கால உத்தரவு தானாகவே ரத்து செய்யப்படும்.

இறுதி ஓய்வூதியத் தொகை நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு, இந்த இடைக்காலத் தொகைக்கும் இறுதித் தொகைக்கும் இடையே உள்ள வித்தியாசம் சரிசெய்யப்படும்.

தகுதியற்ற நபர்களுக்கு தவறுதலாக வழங்கப்பட்ட தொகை ஏதேனும் இருந்தால், அது பின்னர் அரசிடமிருந்து மீட்கப்படும். இந்த உத்தரவு, கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெறவுள்ள அரசு ஊழியர்களுக்கு உடனடி நிதி உதவியை உறுதி செய்யும் வகையில் நடைமுறைக்கு வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *