பிரான்சில் வெப்ப அலை தீவிரம்; உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

2 Min Read

பாரீஸ், ஜூன் 29- பிரான்சில் வெப்ப அலை தீவிரமடைந்து உள்ள நிலையில், கடந்த ஆண்டை விட உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அய்ரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் வெப்ப அலை தீவிரமடைந்து உள்ளது. பல தசாப்தங்களில் இல் லாத அளவுக்கு இந்த ஆண்டில் வெப்ப அலை பரவல் அதிகரித்து காணப் படுகிறது. இதுபற்றி அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஸ்டெபானி ரிஸ்ட் கூறும்போது, முழுமையான பாதிப்பு இன்னும் வெளிப்பட வில்லை என எச்சரித்து உள்ளார்.

இந்த வெப்ப அலை யால் நாடு முழுவதும் வெப்ப நிலை சாதனை அளவாக பதிவாகி உள்ளது. பாரீஸ் நகரில் 40.9 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது. பிரான்சின் பல்வேறு பகுதிகளிலும் வெப்ப நிலை 30 டிகிரி செல்சியஸ் முதல் 44.3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படுகிறது.

இதனால், பெரிய அளவில் பொது சுகாதார நெருக்கடி ஏற்பட்டு 72 துறைகள் சிவப்பு நிற எச்சரிக்கையில் வைக் கப்பட்டு உள்ளன. இது பற்றி ரிஸ்ட் கூறும்போது, சமீப நாட்களில் காணப் படும் அதிகரித்த வெப்ப நிலையால், சிறுவர் சிறுமிகள் உள்பட பொது மக்கள் பலரும் அவசரகால அறைகளில் 10 நாட்கள் வரை தங்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது என்றார்.

கடந்த ஆண்டில் இதே நேரத்தில் காணப் பட்ட உயிரிந்தோர் எண்ணிக்கையை விட நடப்பு ஆண்டில் உயிரி ழப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணி களை காண்கிறோம்.

இதன் தொடர்ச்சியாக, மருத்துவமனைகளில் வெப்பம் சார்ந்த நோய் களால் பாதிக்கப்பட்ட மருத்துவ பயனாளிகளின் எண்ணிக்கையும் அதி கரித்து காணப்படுகிறது. வெப்ப நிலை தணிந்த பின்னரும் மருத்துவ பயனாளிகள் சிகிச்சை பெறுவது சில வாரங்கள் வரை நீடிக்கலாம் என்றும் ரிஸ்ட் கூறினார்.

எனினும், உயிரிழந்தவர் களின் சரியான எண் ணிக்கையை அவர் வெளி யிடவில்லை. ஏனெனில், 60 சதவீதம் அளவிலேயே மின்னணு முறையில் இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அதனால், முழுமையான அளவில் சான்றிதழ்கள் வழங்கப்பட்ட பின்னரே நம்பத்தக்க எண்ணிக்கை பற்றிய விவரம் தெரிய வரும் என்றும் அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *