ஒஸ்லோ, ஜூன் 12- இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தற்போது உலகெங்கும் நடந்து வரும் ஆயுத மோதல்களின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது என ஒஸ்லோ அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (PRIO) தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
1946 ஆம் ஆண்டு முதல் போர் கள் குறித்து பதிவு செய்யப்பட்ட நிலை யில் இதுவே மிக அதிக எண்ணிக்கையா கும். 2025 ஆம் ஆண்டில் மட்டும் போர் சார்ந்த வன்முறைகளில் சுமார் 2,45,000 பேர் கொல்லப்பட்டதாகவும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இன்றைய உலகம் முன்னெப்பொ ழுதும் இல்லாத அளவுக்கு மிகவும் பிளவுபட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் தீவிரமடைந்துள்ளது. காசா மற்றும் லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்கள் கட்டுக்கடங்காமல் தீவிரமடைந்துள்ளது. சூடானில் உள்ளாட்டுப்போர் தீவிர மடைந்துள்ளது. அமெரிக்காவும் ஈரான் மீதான போரை நிறுத்த மறுக்கிறது.
இப்படி நீண்டகாலமாக நீடித்து வரும் போர்கள், நெருக்கடிகள், புதிதாக வெடித்துள்ள பெரிய அளவிலான போர்கள் என இரண்டுமே, ஒரே நேரத் தில் முன்னெப்போதும் இல்லாத எண் ணிக்கையிலான போர்கள் நடப்ப தற்குக் காரணமாக அமைந்துள்ளது. நாடுகளுக்கு இடையே வெடிக்கும் போர்களின் எண்ணிக்கை 2025 இல் இரு மடங்காக அதிகரித்தது.
இதில் இந்தியா-பாகிஸ்தான், ஆப்கா னிஸ்தான்-பாகிஸ்தான், கம்போடியா-தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடை யேயான மோதல்களும் அடங்கும். பதிவான 65 போர்களும் 35 நாடுகளில் பரவியுள்ளன. இதில் சில நாடுகள் ஒரே நேரத்தில் பல போர்களில் ஈடுபட்டுள்ளன.
இஸ்ரேல் அர சானது காசா, சிரியா, லெபனான், ஈரான், ஏமன் ஆகிய நாடுகளுடன் தொடர்புடைய மோதல்களில் ஒரே நேரத்தில் ஈடுபட்டுள்ளது. மியான்மர், பாகிஸ்தான், நைஜீரியா ஆகிய நாடுகளும் ஒன்றுக்கும் மேற்பட்ட போர்களை எதிர்கொண்டுள்ளன. ஆப்பிரிக்கப் பிராந்தியம் தான் அரசு சார்ந்த வன்முறைகளால் உலகி லேயே மிக அதிகமாகப் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது.
அதனைத் தொ டர்ந்து ஆசியா, மேற்கு ஆசியா, தென் அமெரிக்கா, அய்ரோப்பா ஆகிய பிராந்தியங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. நாடுகளுக்கு இடையிலான போர்களில் 2021 இலிருந்து சுமார் 9,30,000- க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட் டுள்ளனர். இந்த எண்ணிக்கை, இதற்கு முந்தைய 20 ஆண்டுகளில் பதிவான மொத்த உயிரிழப்புகளுக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.
