கைலாசநாதர் கைவிட்டாரே – அந்தோ பரிதாபம்! ‘புனித’ யாத்திரை சென்ற 52 இந்தியர்கள் நேபாளத்தில் தவிப்பு!

1 Min Read

மானசரோவர், ஜூன் 29  சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் கைலாஷ் பனிமலை அமைந்துள்ளது. இங்கு இந்தியாவில் இருந்து ஏராளமா னோர் ஆண்டுதோறும் ‘புனித’ப் பயணம் செல்வார்கள்.

இந்த ஆண்டுக்கான கைலாஷ் மானசரோவர் பயணம் சமீபத்தில் தொடங்கிய நிலையில், கடந்த 20-ஆம் தேதி முதல் குழு இந்திய-சீன எல்லையான நாதுலா பாஸ் என்ற இடத்தை கடந்து சென்றது. நேபாளம் வழியாக சென்ற பக்தர்களில் 52 பேரிடம் சீன நாட்டின் விசா மற்றும் நுழைவு அனுமதி இல்லை என கூறப்படுகிறது. ‘புனித’ பயணத்திற்கு அழைத்துச் சென்ற தனியார் பயண நிறுவனங்கள் அதற்கான முழுமையான ஏற்பாடுகளை செய்யாததால், பக்தர்கள் 52 பேரும் நேபாளத்திலேயே தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான தகவலை தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் பிரிவு) கட் சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே  சமூக வலைதளத்தில் பதிவிட்டு, வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு உடனடியாக உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடர்பான விசா உள்பட அனைத்து பயண ஆவணங்களும் கிடைக்காத வரை பக்தர்கள் யாரும் அங்கு புறப்பட் டுச் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *