யார் பெயரை முதலில் போடுவது? ஆட்சியரிடம் அமைச்சர் ஜெகதீஸ்வரி எதிர்ப்பு! அரசு விழாவில் பரபரப்பு

1 Min Read

விருதுநகர், ஜூன் 28- அரசு விழாவில் தனது பெயரை ஏன் முதலில் போடவில்லை என ஆட்சியரிடம் அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகரில் சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழா 26.6.2026 அன்று காலையில் தொடங்கியது.

விழாவுக்கான மேடைப் பதாகையில், தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்கத் துறை அமைச்சர் கீர்த்தனா பெயர் முதலில் இருந்தது. அதனைத் தொடர்ந்து விளையாட்டுத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பெயர் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது பெயரை முதலில் போடாமல் அமைச்சர் கீர்த்தனாவின் பெயரை முதலில் போட்டதற்கு ஜெகதீஸ்வரி எதிர்ப்பு தெரிவித்தார். விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் துறை மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற ரீதியில் எனது பெயரே முதலில் வர வேண்டும். அரசு நிகழ்ச்சி நடந்த மேடையிலேயே விருதுநகர் ஆட்சியரிடம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

“ப்ரோட்டகால் தெரியாதா? பல முறை சொல்லியாச்சு?” என அதிகாரிகளை கடிந்த அவரை, “இனி இப்படி நடக்காது” என ஆட்சியர் சமாதானப்படுத்தினார்.

விருதுநகர் ஆட்சியரை எச்சரிக்கும் தொனியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *