திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசின் சமூகநல மாணவர் விடுதியில் தந்தை பெரியார் படம் வைப்பதற்காக, அரியலூர் மாவட்ட கழக இளைஞரணி துணைச் செயலாளர் மறவனூர் மதியழகன் விடுதிக் காப்பாளரிடம் வழங்கினார். மேலும் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகமும் வழங்கி விடுதிக் காப்பாளருக்கு பயனாடை போர்த்தி சிறப்பு செய்தார். இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் ஒன்றிய கழகத் தலைவர் கு.பொ. பெரியசாமி, நகர கழகச் செயலாளர் க. பாலச் சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் மூ.முத்துசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

ஆவடி மாவட்டம் திருமுல்லைவாயல் பகுதி கழகச் செயலாளர் மு.ரவீந்திரன் கடந்த 25.5.2026 அன்று தருமபுரியில் சாலை விபத்தில் சிக்கி தருமபுரி விஜயா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்ததும் ஆவடி மாவட்ட கழகத் தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் செயலாளர் க.இளவரசன்,துணைச்செயலாளர் க.தமிழ்ச்செல்வன், ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.கார்த்திக்கேயன், வை.கலையரசன் ஆகியோர் நேற்று (26.06.2026) அதிகாலை 3 மணிக்கு மருத்துவமனைக்குச் சென்று உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
