ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் உருவான புதிய கிளைக்கழகம்

2 Min Read

ஆவடி, ஏப். 28- ஆவடி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 06-00 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் அம்பத்தூர் பகுதி கழக செயலாளர் அய்.சரவணன் கடவுள் மறுப்பு கூற மாவட்ட கழகச் செயலாளர் க.இளவரசன் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கமான பெரியார் உலக நிதி,விடுதலை சந்தா, மாவட்ட கழக வளர்ச்சி நிதி,2026 சட்டமன்ற தேர்தலில் ஆவடி மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளான ஆவடி,அம்பத்தூர், பூவிருந்தவல்லி, மதுரவாயல் ஆகிய தொகுதிகளில் கழக தோழர்களின் பிரச்சார பணி, உண்மை வாசகர் வட்டம் ஆகிய கருத்துகளை விளக்கி கூற மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் நடைபெற்றது.

மேற்கண்ட கருத்துகளை குறித்த ஆலோசனைகளை ஆவடி நகர கழக தலைவர் கோ.முருகன், துணைத்தலைவர் சி.வச்சிரவேல், பட்டாபிராம் பகுதி கழகத் தலைவர் இரா.வேல்முருகன், திருமுல்லைவாயல் பகுதி கழகத் தலைவர் இரணியன், அம்பத்தூர் பகுதி கழகச் செயலாளர் அய்.சரவணன், பூவிருந்தவல்லி பகுதி கழகச் செயலாளர் தி.மணிமாறன், மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் சு.வெங்கடேசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் க.கார்த்திக்கேயன், துணைத்தலைவர் ஜெயராமன்,மாவட்ட கழக வழக்குரைஞர் அணி அமைப்பாளர் பன்னீர்செல்வம், துரைராவணன், புஷ்பா, கன்னடபாளையம் ரவிச்சந்திரன், வை.கலையரசன், சுந்தர்ராஜன், அயப்பாக்கம் அரிகிருஷ்ணன், பிரதாப், ப.வெங் கடேசன் ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்வில் ஆவடி நகர கழக செயலாளர் தமிழ்மணி, பெரியார் பெருந்தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன், பெரியார் பிஞ்சுகள் தருண்,அருள்விழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆவடி கழக மாவட்டத்திற்குட்பட்ட  பகுதியான பாடியில் கிளைக்கழகம் தொடங்குவதென்றும் அதற்கு தலைவராக துரைராவணனையும்  செயலாளராக கண்ணனையும் மாவட்ட கழக தலைவர் பரிந்து ரைக்க அனைவரின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்டது.

மேலும் ஏப்ரல் 10 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பிறந்த நாள் கண்ட மாவட்ட கழக செயலாளர் க.இளவரசனுக்கும் மாவட்ட கழக தலைவர் வெ.கார்வேந்தனுக்கும் மாவட்ட கழகம் சார்பாக சிறப்பு செய்யப்பட்டது.

மேலும் மார்ச்- மற்றும் ஏப்ரல் மாதங்களில் பிறந்த நாள்- திருமண நாள் கண்ட தோழர்களுக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

இறுதியாக மாவட்ட கழக துணைச் செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *