திருவள்ளூர், ஜூன் 27- பெரியபாளை யம் அருகே தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு விபத்தில் ஏற்கெனவே 13 பேர் உயிரிழந்த நிலையில், சென்னை, ராஜீவ்காந்தி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த ஜார்க்கண்ட், ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த பிரீத்தி தேவி (29), புதுபாரி நாயக் (26) ஆகிய பெண் தொழிலாளர்கள் நேற்று (26.6.2026) உயிரிழந்தனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
விபத்து தொடர்பாக, தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதில் முகவராக செயல்பட்ட சுரேஷ் பிரபாத் (41) என்பவரை நேற்று காவல் துறையினர் கைது செய்தனர். சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் குமார், ஆட்சியர் கவிதா சந்தித்து ஆறுதல் கூறினர்.
