சென்னையில் 2 வாரங்களில் 15,710 மெட்ரிக் டன் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றம் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்க மாநகராட்சி நடவடிக்கை

1 Min Read

சென்னை, ஜூன் 15 சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த மே 27 முதல் ஜூன் 9 வரையிலான 2 வார காலத்தில் மட்டும் சுமார் 15,710 மெட்ரிக் டன் கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கழிவு மேலாண்மைக்கான
முக்கிய விதிமுறைகள்

பொது இடங்களில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்க்கும் நோக்கில், 1 மெட்ரிக் டன்னுக்குக் குறைவான இடிபாட்டுக் கழிவுகளை மாநகராட்சியே சிறப்பு வாகனங்கள் மூலம் இலவசமாக அகற்றி வருகிறது.

கட்டணச் சேவை: 1 மெட்ரிக் டன்னுக்கு மேல் கழிவுகளை உருவாக்குப வர்கள், தங்களது சொந்த வாகனங்கள் மூலம் கொடுங்கையூர் அல்லது பெருங்குடி யில் உள்ள செயலாக்க மய்யங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். அங்கு கழிவுகளைப் பதப்படுத்துவதற்காக மெட் ரிக் டன் ஒன்றுக்கு ரூ. 800 செயலாக்கக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

ரூ.16.08 லட்சம் அபராதம்

இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து பொதுமக்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களிடமிருந்து மொத்தம் 321.39 மெட்ரிக் டன் இடிபாட்டுக் கழிவுகள் பெறப்பட்டு செயலாக்க மய்யங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதன் மூலம் கட்டணமாக ரூ. 2,57,112 வசூலிக்கப்பட்டுள்ளது.பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் அனுமதியின்றி விதிகளை மீறி கழிவுகளைக் கொட்டிய 338 நபர்களிடமிருந்து ரூ. 16.08 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இடிபாட்டுக் கழிவு மேலாண்மை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அறிய பொதுமக்கள் மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையோ (https://chennaicorporation.gov.in/gcc/CandD_Waste_Management/) அல்லது 1913 என்ற அவசர உதவி எண்ணையோ தொடர்பு கொள்ளலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *