சென்னை, ஜூன் 26– சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள அரக்கோணம் ரயில் பணிமனையில் அவசர மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் காரணமாக, வரும் ஜூன் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மின்சார மற்றும் பயணிகள் ரயில் சேவைகளில் பெரும் மாற்றம் செய்யப்பட்டு, பல ரயில்கள் முழுமையாகவும், பகுதியளவும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.
