என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தில் திருத்தம் சமூக அறிவியல் பாடத்தில் முக்கிய மாற்றம்

1 Min Read

புதுடில்லி, ஜூன் 26- தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றம், தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பின் வழி காட்டுதலின்படி, பாடப் புத்தகங்களில் பல்வேறு புதிய திருத்தங்களை மேற் கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 9-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் முக்கிய மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

புதிதாக வெளியிடப் பட்டுள்ள ‘சமூகத்தைப் புரிந்துகொள்ளுதல்: இந்தி யாவும் அதற்கு அப்பாலும்’ என்ற சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், ஜனநாயகம் குறித்த அத்தியாயத்தின் கீழ் ‘நெருக்கடி நிலை’ பற்றிய தகவல்கள் ஒரு தனிச்சிறப்பான பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளன. 9-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் அவசரநிலை பிரகடனம் குறித்துத் தனியாக ஒரு பகுதி அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

நெருக்கடி நிலையின் போது குடிமக்களின் அடிப்படை உரிமைகள் எவ்வாறு பறிக்கப்பட்டன என்பது குறித்த விளக்கம்.

ஊடக சுதந்திரத்தின் மீது விதிக்கப்பட்ட கட்டுப் பாடுகள் மற்றும் தணிக்கை முறைகள்.

எதிர்க்கட்சித் தலை வர்கள் மீதான கைது நட வடிக்கைகள்.

இந்தியாவின் ஜன நாயக அமைப்புகள் மற்றும் கட்டமைப்புகள் மீது இந்த அவசரநிலை பிரகடனம் ஏற்படுத்திய ஆழமான தாக்கங்கள்.

மாணவர்கள் இந்தியாவின் வரலாற்று நிகழ்வுகளையும், ஜனநாயகத்தின் முக்கியத் துவத்தையும் ஆழமாகப் புரிந்துகொள்ளும் நோக்கில் இந்த புதிய பாடப்பகுதி சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *