வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு 50 ஆயிரம் பேரை காணவில்லை என அதிர்ச்சி தகவல்!

1 Min Read

காரகஸ், ஜூன் 27– வெனிசுலா நாட்டில் ஏற்பட்ட அடுத்தடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் ஒட்டுமொத்த நாடும் நிலைகுலைந்துள்ளது. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 920 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

50 ஆயிரம் பேருக்கு மேல் காணவில்லை
இடிபாடுகளில் சிக்கியிருந்த 3,360 பேர் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் வசித்த சுமார் 50,000 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்கள் அனைவரும் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.
அய்ம்பதாயிரத்திற்கும் மேற்பட் டோரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் பல மடங்கு அதிகரிக்கக்கூடும் என மீட்புக்குழுவினர் கவலை தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதி களில் அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டு, போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *