சென்னை, ஜூன் 26 அனுமதி இல்லாமல் பொது இடங்களில் பேனர்கள் வைக்கும் கலாச்சாரம் மீண்டும் அதிகரித்துள்ளது. இத னால் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. நீதிமன்றங்கள் தடை விதித்தாலும், அரசியல் கட்சியினர் கண்டுகொள்ளாமல், பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்களை வழிநெடுக வைத்து வருகின்றனர்.
பொது இடங்களில் பேனர்கள் வைக்க நீதிமன்றங்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அனுமதியின்றி பேனர்கள் வைப்பவர்கள் மீது, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல் துறையினர் மூலம் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுள்ளது. ஆனால், கட்சியினரின் ‘அழுத்தம்’ காரணமாக அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பேனர் வைக்கும் கலாச்சாரம் மீண்டும் தலைதூக்கி உள்ளது.
செங்கல்பட்டு நகராட்சி பகுதி யில், பழைய பேருந்து நிலையம், இராட்டிணக்கிணறு, அரசு மருத்து வக்கல்லுாரி மருத்துவமனை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ஆகிய பகுதிகளில், அரசியல் கட்சி யினர், தலை வர்கள் பிறந்த நாள், அமைச்சர்கள் வருகை மற்றும் வணிக ரீதியான தனியார் விழாக்கள், நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான பகுதிகளில், அனு மதி யில்லாமல் பேனர்களை பெரிய அள வில் இடையூறாக வைத்துள்ளனர்.
மதுராந்தகம் நகராட்சியில் தேரடி தெரு, பஜார் வீதி, உக்கம்சந்த் சாலை, மும்முனை சாலை சந்திப்பில், வாகன ஓட்டிகளை திசை திருப்பும் வகையில், பேனர்கள் புற்றீசல் போல முளைத்து உள்ளன.
கூவத்துார் பேருந்து நிறுத்தத்தில் கட்சி யினர், திருமண விழா, பிறந்த நாள் விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெரிய அளவிலான பேனர்களை வைத்து வருகின்றனர். இதனால் பேருந்துக்காக காத்திருப்பவர்களுக்கு விபத்து, உயிரிழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல, செங்கல்பட்டில் அனைத்து பகுதிகளிலும் பேனர்கள் தலைதூக்கி உள்ளன. ஆனால் அவற்றை அகற்ற நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
சாலையில் வைக்கப்பட்டுள்ள பேனர்க ளால், பெரிய விபத்துக்கள் நடப்பதற்குள், பேனர்களை அகற்ற அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு புதிய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
