பெங்களூரு, ஜூன் 24 பெங்களூரு காங்கிரஸ் சார்பில் கருநாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில்,”பிரதமர் மோடி இந்தியாவையும், அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகத்தையும் அழித்து வருகிறார்கள்.
மோடி-டிரம்ப் கூட்டணி இந்தியாவிற்கும் ஒட்டுமொத்த உலகிற்கும் தீங்கு விளைவித்து வருகிறார்கள். ஒன்றிய அரசாங்கம் வேலையின்மையை தீவிரமாக உருவாக்குகிறது. தவறான தகவல்களைப் பரப்புகிறது. தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் மீறப்படுகின்றன. பணவீக்கம் ஜெட் வேகத்தில் எகிறி வருகிறது. மாணவர்களுக்கு நல்ல பாடங்களை கற்பிப்பதை விட என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்வதே மோடி அரசின் முதல் வேலையாக உள்ளது. ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட ஆசிரியர்கள், பல்கலைக்கழக நிர்வாகிகளை நியமிக்கின்றனர். கல்வியைக் காவிமயமாக்குவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்” என அவர் பேசினார்.
“கொள்ளையர்கள் அனைவரும் அமித்ஷாவின் மடியில் அமர்ந்திருக்கிறார்கள்”
சிவசேனா (உத்தவ்) கட்சி குற்றச்சாட்டு
மும்பை, ஜூன்24 கொள்ளையர்கள் அனை வரும் அமித் ஷாவின் மடியில் அமர்ந்தி ருக்கிறார்கள் என சிவசேனா (உத்தவ்) கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகா ரப்பூர்வ ஏடான சாம்னா வெளியிட்டுள்ள அறிக்கை யில்,”அயோத்தி ராமன் கோவில் மேம்பாடு என்ற பெயரில் உண்மையில் அங்கு என்ன நடக்கிறது? கோவிலுக்கு வந்த நன்கொடைகள், தங்கம், வெள்ளி மற்றும் நகைகள் அனை த்தும் பகிரங்கமாகக் கொள்ளையடிக் கப்பட்டுள்ளன. அன்று கஜினி முகமது சோமநாதர் கோவிலைக் கொள்ளைய டித்ததைப் போல, இன்று பாஜக ராமன் கோவிலைக் கொள்ளையடித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் பல முக்கியக் கோவில்கள் கொள்ளைய டிக்கப்பட்டுள்ளன. இந்தக் கொள்ளை யர்கள் அனைவரும் பாஜக கட்சிக்குள் ளேயே, அமித் ஷாவின் மடியில் தான் அமர்ந்திருக்கிறார்கள். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் எவ்விதப் பங்களிப்பும் செய்யாத இந்த மனிதர் கள், தாக்கரேவை நோக்கி விரல் நீட்டுகி றார்கள். இது அமித் ஷாவின் மோசம டைந்து வரும் மனநல ஆரோக்கியத்தை யே காட்டுகிறது” என சிவசேனா (உத்தவ்) கட்சி கூறியுள்ளது.
செயற்கை நுண்ணறிவின் தாக்கம்
கைப்பேசி, மடிக்கணினி விலைகள் உயரும்!
செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) பயன்பாடு அதிகரித்து வருவதால் கைப்பேசி, மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் விலை படிப்படியாக உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான மெமரி மற்றும் ஸ்டோரேஜ் சிப்கள், ஏஅய் பயன்பாட்டிற்கு செல்வதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுவே விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. சந்தையில் ஏற்கெனவே கைப்பேசிகளின் விலை உயர தொடங்கிவிட்டது.
