சிங்கப்பெண் அதிரடிப்படையைத் தொடர்பு கொள்ள உதவி எண் 1091

1 Min Read

சென்னை, ஜூன் 23 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடர்பு கொள்ள தனிச் சிறப்பு உதவி எண் 1091 அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகம் நேற்று (22.6.2026) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்பது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி காவல் உதவியை வழங்கவும், பாதிப்பு அதிகம் ஏற்படக்கூடிய இடங்களில் கண்காணிப்பு பணியை வலுப்படுத்தவும் உருவாக்கப்பட்டது. இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் செயல்திறனை மேம்படுத்தவும், அவசர அழைப்புகளுக்கு விரைவான நடவடிக்கையை மேற்கொள்ளவும் 1091 என்ற சிறப்பு உதவி எண்ணாக அறிவிக்கப்பட்டு, 112 அவசர கால உதவி எண்ணுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவசர காலங்களில் தகவல் பரிமாற்றம் வேகமாக நடைபெறுவதுடன், சம்பவ இடத்திற்கு உடனடி காவல் உதவி வழங்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. இந்த சிறப்பு உதவி எண் மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்காக கூடுதல் சிறப்பு அழைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உதவி மய்யம் 24 மணி நேரமும், வாரத்தின் அனைத்து நாட்களிலும் செயல்பட்டு பயிற்சி பெற்ற காவலர்களால் கண்காணிக்கப்படுகிறது. இக்கட்டுப்பாட்டறை புகார்களை பெற்று உடனடி நடவடிக்கையை ஒருங்கிணைக்கின்றது.

1091 உதவி எண் அழைத்தவுடன், அந்த தகவல் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், அருகிலுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அல்லது ரோந்து குழுவிற்கு அனுப்பப்படுகிறது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லும் காவலர்கள் பாதிக்கப்பட்டவருக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் உதவியை வழங்கி தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதை ெதாடர் கண்காணிப்பின் மூலமாக உறுதிப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *