கல்வியில் இந்துத்துவா திணிப்பு சத்தீஸ்கர் மாநிலத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் காயத்ரி மந்திரம் கட்டாயமாம்! கல்வியாளர்கள், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

ராய்ப்பூர், ஜூன் 22  சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் காலை வழிபாட்டுக் கூட்டத்தின் போது ‘காயத்ரி மந்திரம்’ ஓதுவதை பாஜக அரசு கட்டாயமாக்கியுள்ளது. அரசியல் சாசனத்தை வலியுறுத்தும் மதச்சார்பின்மைக் கோட்பாட்டிற்கு எதிரான இந்த நடவடிக்கை, கல்வி நிலையங்களில் ஒற்றை மதத்தைத் திணிக்கும் முயற்சி என கல்வி யாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

சுற்றறிக்கை

மாநில கல்வித்துறை வெளியிட் டுள்ள புதிய வழிகாட்டுதலில், “மாணவர்களிடையே தார்மீக விழுமி யங்கள், ஒழுக்கம், கலாச்சார விழிப்புணர்வு, மன ஒருமைப் பாடு மற்றும் நேர்மறையான சிந்தனை களை வளர்க்கவும், இந்திய கலாச்சாரத்தின் விழுமியங்களை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கவும்” இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்துக்கும் பொருந்தும் எனவும், அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப் பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மதச்சார்பின்மை கேள்விக்குறி: 

பகுத்தறிவு மற்றும் மதச்சார் பின்மை நோக்கில் இந்த உத்தரவு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 28(1) “அரசு நிதியிலிருந்து முழுமையாக பராமரிக்கப்படும் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் மத போதனைகள் வழங்கப்படக்கூடாது” என்று தெளிவாகக் கூறுகிறது. அரசுப் பள்ளிகளில் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மந்திரத்தை கட்டாயமாக்குவது இந்த சட்டப்பிரிவை நேரடியாக மீறும் செயலாகும்.

கல்வியின் நோக்கம்: பள்ளிகள் என்பவை அறிவியல் மனப்பான்மை, பகுத்தறிவு, கேள்வி கேட்கும் திறன், அனைத்து மதத்தினரையும் சமமாக மதிக்கும் பண்பு ஆகியவற்றை வளர்க் கும் இடங்களாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையை கட்டாயப்படுத்துவது கல்வியின் அடிப்படை நோக்கத்திற்கே எதிரானது.

பன்முகத்தன்மைக்கு எதிரானது: ஒரு வகுப்பறை என்பது இந்து, இசுலாம், கிறிஸ்தவம், பவுத்தம், சீக்கியம், சமணம் என பல்வேறு மதங்களைச் சேர்ந்த மாணவர்களும், எந்த மத நம்பிக்கையும் இல்லாத மாணவர்களும் ஒன்றாக அமரும் இடம். அங்கு பெரும்பான்மை மதத்தின் வழிபாட்டை கட்டாயமாக் குவது சிறுபான்மை மாணவர்களின் மனதில் அந்நிய உணர்வை ஏற் படுத்தி, அவர்களின் மத உரிமையைப் பறிக்கும் செயலாகும். “தார்மீக விழுமியங்கள்” என்பது எந்த ஒரு மதத்திற்கும் சொந்தமானது அல்ல.

எதிர்க்கட்சிகள் கண்டனம் 

“பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்துத் துவா கொள்கைகள் திணிக்கப்படும் என்கிற விமர்சனத்தை சத்தீஸ்கர் அரசு தற்போது உறுதி செய்திருக்கிறது” என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. “அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான பள்ளியில், ஒற்றை மதத்தின் பிரார்த்தனையை கட்டாயமாக்குவது அரசே மதத்தை திணிப்பதாகும். இது அரசியல் சாசனம் வழங்கியுள்ள மத சுதந்திரத்திற்கு எதிரானது” எனவும் அவை விமர்சித்துள்ளன.

கல்வியாளர்கள் தரப்பில், “ஒழுக் கத்தையும், மன ஒருமைப்பாட்டையும் வளர்க்க தியானம், யோகா, விளை யாட்டு, தேசிய கீதம், அரசி யலமைப்பு முகவுரை வாசிப்பு போன்ற மதச்சார்பற்ற வழிமுறைகள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை திணிப்பதன் மூலம் மாணவர்களைப் பிரிக்கவே இது வழிவகுக்கும்” என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

2023 தேர்தலில் 90 தொகுதிகளில் 54 இடங்களை வென்று ஆட்சி யமைத்த பாஜக அரசின் இந்த நடவடிக்கை, கல்வியை காவிமய மாக்கும் முயற்சியின் ஒரு பகுதி என பகுத்தறிவு இயக்கங்கள் கண்டித்துள்ளன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *