முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடை நாகரிகம்!
உரையைப் பாதியில் நிறுத்தி கார்கேவை வழியனுப்பி வைத்தார்
ஓசூர், ஏப். 20- “மக்களின் அடிப்படைப் பிரச்சினை களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஒருநாளும் செவி சாய்த்ததில்லை” என அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே நேற்று (ஏப். 19) கடுமையாக விமர்சித்தார்.
ஓசூரில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து கார்கே பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பல மாதங்களாக மவுனம் காத்த பாஜக, தற்போது அரசியல் உள் நோக்கத்துடன் ‘மகளிர் இடஒதுக்கீடு’ மசோதாவை நிறைவேற்ற நாடகமாடுகிறது. 2023-லேயே மசோதாவைக் கொண்டு வந்தும், அதைச் செயல்படுத்தக் காலம் தாழ்த்துவது ஏன்? பாஜக அரசு பெண்களுக்கு எதிரானது என்பதை மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.
மனுஸ்மிருதி கொள்கையும், வன்முறையும்!
பா.ஜ.க.வின் உண்மையான கொள்கை மனுஸ்மிருதியைப் பாதுகாப்பதே தவிர, மக்களின் நலன் அல்ல. பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை மோடி கண்டித்ததே இல்லை.
தலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடை நாகரிகம்!
உரையைப் பாதியில் நிறுத்தி கார்கேவை வழியனுப்பி வைத்தார்
தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மேடை நாகரிகம்
மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, முதலமைச்சருக்கு ஒரு செய்தி சீட்டு அனுப்பி வைக்கப்பட்டது.
அடுத்தடுத்த தேர்தல் பணிகளுக்காக மல்லிகார்ஜுன கார்கே அவசரமாகப் புறப்பட வேண்டிய சூழல் இருப்பதை அந்தச் செய்தி முதலமைச்சருக்கு உணர்த்தியது.
உடனடியாக தனது பேச்சை நிறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கார்கே அவர்கள் அவசரமாகப் புறப்பட வேண்டி உள்ளது. அதற்காக என்னிடம் அனுமதி கேட்டு செய்தி அனுப்பி உள்ளார். அவர் செல்வதற்கு நாம் அனுமதி கொடுத்து, மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைப்போம்” என்று மேடையிலேயே அறிவித்தார்.
அத்துடன் நில்லாமல், தனது உரையை அப்படியே நிறுத்திவிட்டு, மல்லிகார்ஜுன கார்கேவிடம் சென்று கைகுலுக்கி, அவரை அன்புடன் வழியனுப்பி வைத்தார். தேசிய அளவிலான ஒரு மூத்த தலைவருக்கு, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மேடை நாகரிகத்துடன் கொடுத்த இந்த மரியாதை அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது. கார்கே புறப்பட்டுச் சென்ற பிறகு, முதலமைச்சர் மீண்டும் தனது உரையைத் தொடர்ந்து வேட்பாளர்களை அறிமுகம் செய்தார்.
அரசியல் மேடைகளில் தலைவர்கள் ஒருவரையொருவர் விமர்சித்துக் கொள்ளும் சூழலில், கூட்டணித் தலைவருக்கு உரிய மரியாதையை அளித்து மு.க.ஸ்டாலின் காட்டிய இந்த ‘மேடை பண்பு’ சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளால் ஏழைகளை வதைத்தாரே தவிர, அவர் எவ்வித நன்மையும் செய்ய வில்லை.
தென்னக மாநிலங்களுக்குத் தண்டனையா?
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு, கருநாடகா, கேரளா மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்களுக்கு, ‘தொகுதி மறுவரையறை’ மூலம் பாஜக அரசு தண்டனை வழங்கப் பார்க்கிறது. இந்த அநீதியைத் தடுக்க மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி மிக அவசியம்.
ஸ்டாலினுக்குத்
தேசிய ஆதரவு
ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப் பயணம் மேற்கொண்டு மக்கள் பிரச்சினைகளை நேரடியாக அறிந்தார். ஆனால் மோடியோ ஆட்சி அதிகாரத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனி ஆள் இல்லை; அவருக்குப் பின்னால் ஒட்டுமொத்த நாடும், காங்கிரஸ் கட்சியும் உறுதுணையாக நிற்கிறது.
இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பேசினார். கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் மக்களின் மனங்களைக் கவரும் வகையில், எளிமையான கன்னடத் தமிழில் அவர் பேசியது அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

