‘நான் முதல்வன்’ பெயர் மாற்றத்திற்கு அன்பில் மகேஸ் கடும் கண்டனம்!

சென்னை, ஜூன் 22- திமுக ஆட்சிக்காலத்தில் செயல் படுத்தப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரை தவெக அரசு ‘தமிழ்நாடு திறன் மேம்பாடு திட்டம்’ என மாற்றியுள்ளதற்கு திமுக மேனாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேனாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே இந்த பெயர் மாற்றத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பெயர்களை அழிக்கலாம்! ஆனால் வரலாற்றைத் தொடக்கூட முடியாது! போலியான மாற்றத்தால் வரலாற்றைத் துளிக் கூட மாற்ற முடியாது!” என்று சாடியுள்ளார்.

‘நான் முதல்வன்’ பெயர் உருவான வரலாறு 

தனது அறிக்கையில் அன்பில் மகேஷ், “திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் பெயர்கள் மாணவர் களால் மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது. ‘நான் முதல்வன்’ திட்டத்திற்கு அய்ந்து பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவற்றில் ‘நான் முதல்வன்’ என்ற பெயர் இல்லை.

முழுத் திட்டத்தையும் கேட்ட மேனாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘ஒவ்வொரு மாணவரும் தேர்ந்தெடுக்கும் துறையில் முதலிடத்தை அடைய வேண்டும்.

அதனால் ‘முதல்வன்’ என்ற சொல் இடம்பெறும் வகையில் ‘நான் முதல்வன்’ என்று பெயரிட்டால் என்ன?’ என்று பரிந்துரைத்தார். அப்பெயர் தமிழ்நாட்டு இளைஞர் களைத் தலைநிமிர வைத்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “புதுமைப்பெண் திட்டம்” என்ற பெயரை மாண விகளே வாக்களித்துத் தேர்வு செய்ததாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.

“மாணவர் திட்டங்களைத் தொட்டால் எதிர்ப்போம்” 

இன்றைய ஆட்சியாளர்கள் ‘நான் முதல்வன்’ திட்டத்தைப் போல பல திட்டங்களின் பெயர்களை மாற்றுவார்கள் என்றும், அதற்கு “மக்களுக்கு புரியவில்லை” என காரணம் கூறுவார்கள் என்றும் விமர்சித்த அன்பில் மகேஷ், “இந்த உணர்வுகள் எல்லாம் ‘முதலமைச்சர்தான் ஆக வேண்டும்’ எனும் அஜெண்டாவோடு வந்தவர் களுக்கு தெரியப் போவதில்லை” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

“வரலாறாக நிலைத்து நிற்கப்போகும் திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களின் பெயர்களை பற்றி இப்படி சொல்லி க்கொண்டே போகலாம். ஆனால், மாணவர்களுக்கான திட்டங்களை தொட நினைத்தால் ஜனநாயக முறையில் எதிர்ப்பதற்கு தயார் ஆவோம்!” என்று அவர் தனது அறிக்கையை முடித்துள்ளார்.

பின்னணி: திமுக ஆட்சியில் இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக் காக தொடங்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரை தற்போதைய தவெக அரசு ‘தமிழ் நாடு திறன் மேம்பாடு திட்டம்’ என மாற்றியுள்ளது.

மேலும், இத்திட்டம் தொடர்பான முந்தைய இணையதளப் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப் படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *