அரசு பழங்குடியினர் பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது!

2 Min Read

சென்னை, ஜூன் 20- அரசு பழங்குடியினர் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வரும் 22 மற்றும் 23ஆம் தேதி நடைபெறுகிறது.

பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி, தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், காப்பாளர்கள், இடைநிலை ஆசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு, மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான இணைய வழி பொது மாறுதல் கலந்தாய்வு வருகிற 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்கள் காலை 10 மணி முதல் அந்தந்த மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்திட்ட அலுவலகம் / ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

பணியிடமாறுதல் கோரி இணைய வழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

மாநகராட்சி சார்பில்

சென்னையில் 55 பள்ளிகளில்
குளிர் கூரை அமைக்க நடவடிக்கை!

தமிழ்நாடு

சென்னை, ஜூன் 20– மாநகராட்சி சார்பில் சென்னையில் 55 பள்ளிகளில் குளிர் கூரைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிப்பதாவது:

சென்னையில் மேற்கொள்ளப்பட்ட முன்னோடி செயல்பாடுகளின் அனுபவத்தின் அடிப்படையில், பள்ளிகளில் குளிர் கூரை பூச்சு வேலைகள், வகுப்பறைகள் மற்றும் கூரைகளின் வெப்பநிலையை கணிசமாக குறைத்துள்ளன.

இந்த திட்டம் தற்போது தமிழ்நாடு காலநிலை மாற்றப் பணியின் ஒரு பகுதியாக விரிவு செய்யப்படுகிறது. மாநகராட்சியின் 49 பள்ளிகள், 6 அரசு பள்ளிகள் என மொத்தம் 55 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் 5 அரசுப் பள்ளிகளில் குளிர் கூரை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பள்ளிகளில் அதிக ஒளி பிரதிபலிக்கும் கூரையை குளிர் கூரையாக உருவாக்குவதன் மூலம் வெப்ப அழுத்தத்தை குறைத்து, மின்சார தேவையை குறைப்பதற்கும், அரசு பள்ளி கட்டமைப்பில் காலநிலைச் செயல்பாடுகளை மய்யப்படுத்துவதற்கும் உதவியாக உள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சிப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் ஆணையர் சமீரன் தலைமையில் நேற்று (19.6.2026) நடைபெற்றது.

இணை ஆணையர் (கல்வி) க.கற்பகம், தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவன மேலாண்மை இயக்குநர் ஆஷா அஜித், முதன்மை செயல் அலுவலர் பகன் ஜக்தீஷ் சுதாகர், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் உதவி திட்ட இயக்குநர் துஷ்கர் சிறீஹரி ஷிண்டே உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *