தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் 18 பேர் பலி; 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்

லெபனான், ஜூன் 20- தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹிஸ்புல்லா இயக்கம், “தெற்கு லெபனானின் அலி அல் தாஹெர் குன்றின் அருகே முன்னேறி வந்த இஸ்ரேலியப் படையை எங்கள் போராளிகள் பதுங்கி இருந்து தாக்கினர். ஏவுகணைகள் மூலம் மூன்று டாங்கிகளை அழித்தனர். ராக்கெட் மற்றும் பீரங்கித் தாக்கு தல்கள் மூலம் துருப்புகளை குறிவைத்தனர். மோதல்கள் தொடர்கிறது” எனத் தெரிவித்துள்ளது.

ஈரானுடனான அமெரிக்க – இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், இந்த தாக்குதல் போர் நிறுத்தத்தை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. ஏனெனில், லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் லெபனானின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை இரு தரப்பினரும் மதிக்கவும் இந்த ஒப்பந்தம் வலியுறுத்துகிறது.

தெற்கு லெபனானில் தனது படைகளை நிறுத்தியுள்ள இஸ்ரேல், தெற்கு லெபனானில் 10 கிலோ மீட்டர் வரை தனது துருப்புகளை தக்கவைத்துக்கொள்ள முயன்று வருகிறது.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் அலுவலகத்துடன் இஸ்ரேல் கடுமையான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. தெற்கு லெபனானில் உள்ள தனது படைகளை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகளை நிரா கரித்து வரும் இஸ்ரேல், ஹிஸ்புல்லா நிலைகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *