சட்டமன்றத்தில் இன்று முதுபெரும் தலைவர் தோழர் நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல்

1 Min Read

சென்னை, ஜூன் 19- சட்டமன்றத்தில் இன்று (19.6.2026) முதுபெரும் தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட மற்றும் மறைவுற்ற மேனாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

17ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று (18.6.2026) காலை தொடங்கியதும் ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர் உரையாற்றினார்.

இன்று (19.6.2026) சட்டப்பேரவைக் கூட்டம் கூடியதும், சட்டமன்றப் பேரவையின் மேனாள் உறுப்பினர்களான சி.இராமசுவாமி, தா.வீராசாமி, சி.சுவாமிநாதன், அ.க.ஆறுமுகம், பெ.கண்ணன், அ.நாஞ்சில் முருகேசன் ஆகியோர் மறைவு குறித்து பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் இரங்கற் குறிப்புகளை வாசித்தார். பின்னர் அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித் துளிகள் அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.

இரங்கல் தீர்மானங்கள்

இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் திரு.நல்லகண்ணு, சட்டமன்றப் பேரவை மேனாள் செயலாளர் தி.கு.இராமசாமி பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, கே.ராஜன், பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா ஆகியோரின் மறைவு குறித்து இரங்கல் தீர்மானங்களை பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் வாசித்தார். இதையடுத்து அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று இரண்டு மணித் துளிகள் அமைதி காத்து மறைவுற்றவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *