சின்னாளபட்டி, ஜூன் 19- திண்டுக்கல் பழனி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 13.06.2026 அன்று மாலை 5.00 மணி அளவில் சின்னாளபட்டி நகரத் தலைவர் கா.நாகேந்திரன் இல்லத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடல் கூட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்டத் தலைவர் இரா. வீரபாண்டியன் தலைமை வகித்தார்.
திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் மு. ஆனந்த முனிராசன், விருதுநகர் நகரத் தலைவர் கா.நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வைத்தனர். பழநி மாவட்டத் தலைவர் பி.ஆர்.பி.ஆனந்த கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் பொன். அருண்குமார், மாவட்ட துணைச் செயலாளர் வழக்குரைஞர்.பி.ஆனந்தன், மாவட்ட இணைச் செயலாளர் ஆ.இராமகிருஷ்ணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் திராவிடச் செல்வன், பழநி ஒன்றிய செயலாளர் சி. இராதாகிருஷ்ணன், திண்டுக்கல் மாநகரச் செயலாளர். தி.க. செல்வம், நத்தம் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.பி.செல்லம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.வல்லரசு, சின்னாளப்பட்டி நகர செயலாளர் கா.நாகேந்திரன். நிலவை முத்துக்குமார், வதிலை க.சுந்தர், பி.முத்துக்கருப்பையா, P.மருது பாண்டியன், நெல்லுப்பட்டு இராமலிங்கம் ஆகியோரின் உரையினைத் தொடர்ந்து, திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா. செந்தூர பாண்டியன், கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் ஆகியோர் வருகின்ற 26.06.2026 அன்று சின்னாளபட்டியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கலந்து கொள்ளும் திறந்த வெளி மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து கருத்துரை வழங்கினார்கள்.
பழநி கழக மாவட்டத்திற்கு புதிய மாவட்டத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் பி.ஆர்.பி. ஆனந்த கிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
தீர்மானங்கள்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளைப்படி எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80ஆம் ஆண்டு விழா திறந்தவெளி மாநாட்டினை 26.06.2026 அன்று சின்னாளபட்டியில் மிகச் சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
சின்னாளப்பட்டியில் தந்தை பெரியாரின் அரும்பெரும் தொண்டினை, எதிர்ப்பினை தகர்த்தெறிந்து வெற்றி கண்ட வரலாற்றினை இன்றைய தலைமுறைகள் அறிந்து கொள்ளும் வகையில் 26.06.2026 அன்று திறந்த வெளி மாநாடு நடத்துவதற்கு வாய்ப்பு அளித்த ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
ஆயிரம் இளைஞர்களை அறப் போராட்ட கள வீரர்களை தாருங்கள் என்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கையை ஏற்று இருபால் இளைஞர்களின் பட்டியலை அவர்களிடம் வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.
நன்கொடை வழங்குவதாக அறிவித்தவர்கள்.
எம்.ஆர்.பி. செல்வம், நத்தம் – ரூ.20,000
திராவிடச் செல்வன் – ரூ. 5,000
தி.க.செல்வம் – ரூ. 5,000
சுந்தர், வதிலை – ரூ. 5,000
நல்லதம்பி, விருதுநகர் – ரூ. 5,000
சி. இராதாகிருஷ்ணன். – ரூ. 2,000
சி. வல்லரசு – ரூ. 2,000
