பொற்கால ஆட்சி தந்த “கலைஞர் 103” வடக்குத்து -அண்ணா கிராமத்தில் கழக பொதுச் செயலாளர் சிறப்புரை!

1 Min Read

திராவிடர் கழகம்

வடக்குத்து, ஜூன் 19- வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகம் மாதாந்திர சிறப்பு கூட்டம் 15.6.2026 அன்று மாலை 6 மணி முதல் 8 45 மணி வரை பொற்கால ஆட்சி தந்த கலைஞர் 103 எனும் சிறப்பு கூட்டம் கிளைக் கழக தலைவர் தங்க பாஸ்கர் தலைமையில் மாவட்ட தலைவர் தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன், மாவட்டத் துணைத் தலைவர் மணிவேல், நூலகர் கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் டிஜிட்டல் ராமநாதன், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இரா. பெரியார்செல்வம், பெரியார் வீர விளை யாட்டு கழக மாவட்ட தலைவர் மாணிக்கவேல், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் முனியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய கழக தலைவர் கனகராஜ் வரவேற்புரை ஆற்றினார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திர சேகரன் கலைஞரின் பொற்கால ஆட்சி எனும் தலைப்பில் அவரின் சாதனைகளை மக்கள் நலத் திட்டங்களைச் சட்டங்களை விளக்கி ஒரு மணி நேரத்திற்கு மேல் சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் முத்துராஜ் தங்கசாமி சேகர் பாவேந்தர் விரும்பி தமிழ்மணி திராவிட மணி மருவாய் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைவர் கலைஞரின் படத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் மாலை அணிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *