ஆசிரியருக்குக் கடிதங்கள்

கிராமம் கிராமமாகக் கொள்கை பரவ வேண்டும்

தங்களின் அறிக்கையை ‘முரசொலி’ ஏட்டில் படித்து மிகவும் மகிழ்ந்தேன்! நெகிழ்ந்தேன்!
முத்தமிழ் அறிஞர் மானமிகு சுய மரியாதைக்காரர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு தாய்க் கழகம் சார்பில் 103 ஊர்களில் பிறந்த நாள் விழா பெருமிதப் பூரிப்போடு கொண்டாடப்படுகிறது என்கிற நல்அறிக்கைக் கண்டு நல்லிதயம் கொண்ட உடன் பிறப்புக்கள் மகிழ்ந்து மட்டற்ற வாழ்த்துகளை தெரிவித்த வண்ணமுள்ளனர்.
அதற்காக என் நன்றி கலந்த வணக் கத்தைத் தங்களுக்கு தெரியப்படுத்தி மகிழ்கின்றேன்.
சொற்பொழிவாளர்களைக் கொண்டு நம்முடைய கொள்கைகளை மீண்டும் மக்களிடையே கிராமம் கிராமமாக நேரடியாக எடுத்துச் சொல்லும் வாய்ப் பினை தி.மு.க. தலைவர் அவர்களிடம் தாங்கள் நினைவுபடுத்திட அன்புடன் வேண்டுகிறேன். நன்றி.
– இ. முத்தையா
தி.மு.க. – தலைமைக் கழக

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *