நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசு சிறப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை!

1 Min Read

சென்னை, ஜூன் 18  ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கவும், ஜாதி – மத மறுப்பு இணையர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும் நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே வலி மையான சிறப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அரசை வலியுறுத்தி யுள்ளது.

இதுகுறித்து அமைப்பின் தலைவர் த. செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் பி. சுகந்தி ஆகியோர் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். “கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங் களில் 5 ஜாதி ஆணவக் கொலைகள் நடந்துள்ளன.

தற்போதைய குற்றவியல் சட்டங்கள் இத னைத் தடுக்கப் போவதில்லை. திருமண வயதை எட்டியவர்களின் இணையத் தெரிவு சுதந்திரத்தைப் பாதுகாக்கச் சிறப்புச் சட்டம் அவசியமாகும். இந்தியச் சட்ட ஆணையத்தின் 242- ஆவது அறிக்கை (2012) மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் இத்தேவையை உறுதிப்படுத் தியுள்ளன.

இக்கோரிக்கைக் காகத் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடந்த 15 ஆண்டு களாகப் போராடி வருகிறது. சிறப்புச் சட்டம் இயற்றுவதைக் கொள்கை யளவில் ஏற்று, முந்தைய அரசு 2025 அக்டோபர் 17 அன்று ஓய்வு பெற்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில் ஆணையம் அமைத்தது.

தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் ஒருங்கிணைப்பில் பல் வேறு தாழ்த்தப்பட்ட அமைப்பு களும், சமூக அக்கறை கொண்ட வழக்குரைஞர்களும் இணைந்து வலுவான சட்டப் பரிந்துரைகளை இந்த ஆணையத்திடம் வழங்கி யுள்ளனர். எனவே, நீதிபதி பாஷா ஆணையத்தின் அறிக் கையை விரைந்து பெற்று, தவெக அரசு தனது முதல் சட்டமன்றக் கூட்டத் தொட ரிலேயே இதற்கான சிறப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

இதற்கான அறிவிப்பை ஆளுநர் உரையில் வெளி யிட முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *