‘தேசிய நல்லாசிரியர் விருதுக்கு’ விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

1 Min Read

சென்னை, ஜூலை 15- தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் நாள் என்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் சிறந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசு சார்பில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். அதன்படி நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 15இல் தொடங்கி ஜூலை 13ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இந்நிலையில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் https://nationalawardstoteachers.education.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதியான ஆசிரியர்களை முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான மாவட்ட தேர்வுக் குழு தேர்ந்தெடுத்து மாநில தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வைப்பார்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *