சென்னை, மே 7- நடிகர் விஜய் வீட்டில், 2015ஆம் ஆண்டில் நடத்திய சோதனையில், புலி படத்துக்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை, கணக்கில் காட்டாததை கண்டறிந்து, 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்து, வருமான வரித்துறை உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, நடிகர் விஜய் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை, கடந்த பிப்.,5இல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், வருமான வரித்துறை சோதனைகளின்போது பெறப்பட்ட ஆவணங்கள், விஜயின் வாக்குமூலம், மதிப்பீட்டு நடவடிக்கைகள், 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்த உத்தரவு ஆகியவற்றை ஆய்வு செய்து, வருமான வரி சட்டத்தின் கீழ் வழக்கு தொடரவும், வருமானத்தை மறைத்ததற்காக மோசடி, குற்றச் சதி உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிட கோரி, கொடுங்கையூரைச் சேர்ந்த எம்.ராஜ்குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
மனுவில் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ், விசாரணை நடத்த தேவையான முகாந்திரம் உள்ளதா என்பதை ஆராய்வதற்காக, அந்த ஆவணங்களை அமலாக்க இயக்குநரகத்துக்கு அனுப்ப உத்தரவிடும்படி கோரிக்கை வைக்கப் பட்டது.
இந்த மனுவுக்கு எண்ணிடாத பதிவுத்துறை, விசாரணைக்கு உகந்ததா என முடிவெடுக்க, தலைமை நீதிபதி அமர்வில் பட்டிய லிட்டது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, ‘ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டால்,அதை விசாரணைக்கு உகந்ததா என்பதை குறித்து முடிவு செய்வதற்காக, எண்ணிடும் பணியை முடிக்காமல் இருக்கக் கூடாது’ என கூறி, விஜய்க்கு எதிரான மனு வை எண்ணிட்டு, விசாரணைக்கு உகந்ததா என்ற தலைப்பில், விசாரணைக்கு பட்டியலிட, பதிவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு எதிரான மனு எண்ணிடும் நடைமுறை, இன்று முடிந்துள்ளது. இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்த மனுவுக்கு எண்ணிடாத பதிவுத்துறை, விசாரணைக்கு உகந்ததா என முடிவெடுக்க, தலைமை நீதிபதி அமர்வில் பட்டியலிட்டது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, ‘ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டால், அதை விசாரணைக்கு உகந்ததா என்பதை குறித்து முடிவு செய்வதற்காக, எண்ணிடும் பணியை முடிக்காமல் இருக்கக் கூடாது’ என கூறி, விஜய்க்கு எதிரான மனுவை எண்ணிட்டு, விசாரணைக்கு உகந்ததா என்ற தலைப்பில், விசாரணைக்கு பட்டியலிட, பதிவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு எதிரான மனு எண்ணிடும் நடைமுறை, இன்று முடிந்துள்ளது. இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனு பட்டியலிட உத்தரவு
Leave a Comment
