– புகழ் மலரை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரையாற்றினார் வல்லம் பெரியார் கல்வி நிறுவன வளாகத்தில் தொண்டறச் செம்மல் உபயதுல்லா பெயர் இடம் பெறும் – தமிழர் தலைவர் அறிவிப்பு!
தஞ்சை, ஜூன் 17 தமிழக வணிகவரித்துறை மேனாள் அமைச்சர் ‘குறள்நெறி நெஞ்சர் ’தஞ்சை சி.நா.மீ.உபயதுல்லா அவர்களின் 85 ஆவது பிறந்தநாள் புகழ் மலர் வெளியீட்டு விழா 16-06-2026 மாலை 5 மணி அளவில் தஞ்சாவூர் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்றது.
தொடக்கத்தில் தொலைக்காட்சி புகழ் சாலியமங்கலம் ராமதாஸ் குழுவினரின் வீணை இசை, தஞ்சை மானிங்ஸ்டார் மெட்ரிக் பள்ளி மாணவ – மாணவியரின் கலை நிகழ்ச்சி, சடையார் கோயில் நாராயணசாமி குழுவினரின் கோலாட்ட கலை நிகழ்ச்சி, கலைமாமணி வளப்பக்குடி வீரசங்கர் இசை விருந்து நடைபெற்றது.
கவிச்சுடர் கவிதைப் பித்தன் தலைமையில் ‘புவியிற் சிறந்த மாமனிதருக்கு புகழஞ்சலி’ என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. ‘குறள் அமுதே!’ என்ற தலைப்பில் தஞ்சை இனியன் ‘கொள்கை வேழமே!’ என்ற தலைப்பில் கவிஞர் வீ.ம. இளங்கோவன், ‘மனிதநேயமே!’ என்ற தலைப்பில் கவியருவி வல்லம் தாஜ்பால், மாண்பின் வடிவமே! என்ற தலைப்பில் தமிழ் மாமணி வா.மு.சே திருவள்ளுவர், ‘தஞ்சையில் நிதியமே!’ என்ற தலைப்பில் கவிஞர் ராகவ் மகேஷ், சமய நல்லிணக்கமே! என்ற தலைப்பில் கவிஞர் ஆ.மரியஎட்வின் ஆகியோர் கவி பாடினர்.

ஓய்வுபெற்ற தமிழ் பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன் நிகழ்விற்கு தலைமையேற்று உரையாற்றினார்.
தஞ்சை முத்தமிழ் மன்றத்தின் பொதுச்செயலாளர் நல்லாசிரியர் புலவர் மா.கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
மேனாள் அமைச்சர் ‘குறள்நெறி நெஞ்சர்’ சி. நா.நி.உபயதுல்லா அவர்களின். 85 ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ்மலரை வெளியிட்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி சிறப்புரையாற்றினார்.
வல்லம் பெரியார் கல்வி நிறுவன வளாகத்தில் மேனாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா பெயர் இடம் பெறும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவித்தார்.
மேனாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன், அருட்தந்தை அமுதன் அடிகளார் ஆகியோர் புகழ்மலரைப் பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினர்.
சட்டமன்ற உறுப்பினர் தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், திமுக மத்திய மாவட்ட அவைத்தலைவர் சி.இறைவன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் து. செல்வம் ,தஞ்சை மேனாள் மேயர் திமுக மாநகர செயலாளர் சண்.இராமநாதன், திமுக மருத்துவரணி மாநில துணைச் செயலாளர் – தஞ்சை துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, குடந்தை துணை மேயர் சுப.தமிழழகன், தஞ்சை பாம்பே ஸ்வீட்ஸ் உரிமையாளர் பி.ஜி.சுப்பிரமணியன் மகாராஜா ரெடிமேட்ஸ் உரிமையாளர் ஆசிப்அலி திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்று புகழ் மலரை பெற்றுக் கொண்டனர்.

உபயதுல்லா அவர்களின் கொள்ளுப் பேரன் முகமது பஜார் புகழ் நினைவேந்தல் உரையாற்றினார்.
தஞ்சை முத்தமிழ் மன்ற தலைவர் உபயதுல்லா அவர்களின் மகள் சி.நா.மீ.உ. பரிதா பேகம் நன்றியுரை ஆற்றினார்.
உபயதுல்லா அவர்களின் பேரன் ராஜாக்கனி சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்தார்.
முனைவர் ரம்யா பிரகாசம் இணைப்புரை வழங்கினார்.
திராவிட கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்ட காப்பாளர் மு.அய்யனார், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, தஞ்சை மாநகர செயலாளர் இரா. வீரக்குமார், பேராசிரியர் முனைவர் பழனி அரங்கசாமி, மருத்துவர் முனைவர் சு.நரேந்திரன், பகுத்தறிவாளர்கழக ஊடகப்பிரிவு மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, திராவிடர் கழக மாநில தகவல் தொழில்நுட்பக் குழு ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு. பழனிவேல், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியன், தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் ராமலிங்கம், ரூபாவதி, பூபதி, புதிய பேருந்து நிலையம் பகுதி தலைவர் கலைச்செல்வன், பகுதிச் செயலாளர் துரை, விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஏ.வி. என். குணசேகரன், பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் அழகிரி, ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், திருவையாறு ஒன்றிய தலைவர் கண்ணன், ஒன்றிய செயலாளர் துரை ஸ்டாலின், பெரியார் அலி, தஞ்சை மாநகர துணைச் செயலாளர் இளவரசன், தஞ்சை மாநகர துணைத் தலைவர் டேவிட், கரந்தை பகுதி தலைவர் விஜயன் கன்னை கிழக்கு கிளைக் கழக தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட கழகத் தோழர்கள் திராவிட முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் ஆயிஷா கனி ஆரா உள்ளிட்ட உறவினர்கள் வர்த்தக பெருமக்கள் பொதுமக்கள் திரளாக பங்கேற்று பெருமை சேர்த்தனர்.
