பெரியார் உலகம்” கட்டுமானப் பணிகளை கழகத் தலைவர் ஆசிரியர், மேனாள் அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் ஆகியோர் பார்வையிட்டனர் (16.06.2026)

*‘‘பெரியார் உலகம்’’ கட்டுமானப் பணிகளை பார்வையிடும் தமிழர் தலைவர் ஆசிரியர் * ‘‘பெரியார் உலகம்’’ திடலுக்கு வருகை தந்த திமுக முதன்மைச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவைக் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார். * பெரியார் உலகத்தில் 60 அடி பீடம், 95 அடி தந்தை பெரியார் சிலை மொத்தம் 155 அடியில் அமையவுள்ள பெரியார் உலகம் கட்டுமானப் பணிகள் குறித்து கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் விளக்கிக் கூறுகிறார்.

*பெரியார் உலகத்தில் கட்டப்பட்டுள்ள 3.75 இலட்சம் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்றும் கட்டடம், பெரியார் உலகம் அலுவலகம், பெரியார் உலகம் செடி வளர்ப்பு (நர்சரி கார்டன்) ஆகியவற்றைத் தமிழர் தலைவர் ஆசிரியர் பார்வையிட்டார். * பெரியார் உலகம் முதல் தளத்தைத் தமிழர் தலைவர் ஆசிரியர் பார்வையிடும் காட்சி

திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள ‘பெரியார் உலகம்’ கட்டுமானப் பணிகளை இன்று காலை 7.45 மணியளவில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பார்வையிட்டார். சிலை அமைக்கும் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். உடன் தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், தி.மு.க. பொறுப்பாளர் துரைராஜ், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திருச்சி மாவட்ட கழகத் தலைவர் ஆரோக்கியராஜ், தொழிலாளர் அணிச் செயலாளர் சேகர், மா.செந்தமிழினியன், மோகன்தாஸ், மகாமணி, அறிவுச்சுடர், முருகன், விஜயராகவன், வி.சி.வில்வம், மார்ட்டின், அசோகன், காமராஜ், அருள்மொழி, குறிஞ்சி, மற்றும் பொறியாளர்கள் காசி விஸ்வநாதன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பொறியாளர் குழுவினர் நடக்கக்கூடிய பணிகளை விரிவாகக் கழகத் தலைவருக்கு எடுத்துக் கூறினார்கள். உடன்: திருச்சி மற்றும் லால்குடி கழகத் தோழர்கள்.
