பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் 200-ஆவது கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆற்றிய உரையின் நேற்றைய (28.05.2026) பகுதியில், “தேவையில்லாத ஒரு மாநாடு – இந்த மாநாட்டிற்கு என்னை அழைத்திருக்கிறீர்கள்” என்ற துணைத் தலைப்பின் கீழ், ‘ஆனால்’ என்று தொடங்கும் பாராவையும், அதன் அடுத்த பாராவையும் பின் வருமாறு திருத்தி வாசிக்கக் கோருகிறோம்.
“ஆனால், தந்தை பெரியாருக்கு வரவேற்பு வழங்குவதற்கு சில காங்கிரஸ் காரர்களும், பார்ப்பனர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாகப் பீப்பிள்ஸ் பார்க் (People’s Park) அருகில் கருப்புக் கொடி காட்டுகிறோம் என்று வந்தனர். அப்போது மைனர் மோசஸ் போன்ற வர்களும், சில தொண்டர்களும் விரைந்து வந்து, தந்தை பெரியாருக்கு எதிர்ப்பு தெரிவித்தோரைத் துரத்தி விரட்டினர்.
இதேபோல் பின்னர் தந்தை பெரியார் நடத்திய இறுதி மாநாடான “தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டின்” போதும், பெரியாருக்கு எதிராகக் கலவரத்தில் ஈடுபட முனைந்தவர்களை மைனர் மோசஸ் மற்றும் தோழர்கள் எதிர்த்து நின்றனர் என்பதும் வரலாறு.”
தவறுக்கு வருந்துகிறோம்.
ஆ-ர்
