சென்னை. ஜூன் 16- பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாளின் நகல்களை (Scan Copy) தேர்வர்கள் இன்று (16.6.2026) முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 20-ஆம் தேதி வெளியிடப் பட்ட நிலையில், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர் களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு 52,236 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 74,862 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக இயக்ககம் தெரிவித்துள்ளது.
விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யும் முறை
விண்ணப்பித்த தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் பாட வாரியாக பல்வேறு கட்டங்களாக நகல்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.
இன்று முதல்: தமிழ், கணிதம் மற்றும் விருப்பமொழிப் பாடம் ஆகிய பாடங்களின் விடைத்தாள் ஒளிநகல்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு விடைத்தாள் நகலைப் பதிவிறக்கம் செய்த பிறகு, அதில் திருப்தி இல்லாத தேர்வர்கள் மறுமதிப்பீடு அல்லது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான படிவத்தையும் இணையதளத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதிகள்: 17.06.2026 முதல் 23.06.2026 வரை
விண்ணப்பிக்கும் முறை: நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்து, கட்டணத்தைப் பணமாகச் செலுத்த வேண்டும்.
முக்கியக் குறிப்பு (குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு)
தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை ஒப்படைத்துக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
கட்டண விவரங்கள்
மறுமதிப்பீடு பாடம் ஒவ்வொன் றிற்கும் ரூ.505 மறுகூட்டல் பாடம் ஒவ்வொன்றிற்கும் ரூ.205.
உதவிக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்
விடைத்தாள் நகல் பதி விறக்கம் செய்தல், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், தேர்வர்கள் கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது: 9498383075 9498383076
