திருவனந்தபுரம், ஜூன் 16 சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கைச் சீர்குலைக்க திரைமறைவில் சூழ்ச்சி கள் நடைபெறுவதாக எனக்கு சந்தே கம் உள்ளது என கேரள எதிர்க்கட்சி தலைவர் பினராயி விஜயன் கூறி யுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”சபரிமலை தங்கத் திருட்டில் ஈடுபட்டிருந்த ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் வழக்குரைஞரான கே.பி.பிர தீப்பை தேவஸ்வம் சிறப்பு வழக்கு ரைஞராக நியமித்திருப்பது கேள்விக்குரிய நடவடிக்கையாகும். உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்தது
அந்தத் தங்கம், ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. ஆனால் தங்கத் திற்குப் பதிலாக செப்புத் தகடுகளில் முலாம் பூசப்பட்டி ருந்ததை சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்தது. அதன் அடிப்படையில்தான் பங்கஜ் பண்டாரியும் மற்றவர்களும் கைது செய்யப்பட்டனர்.
ஆனாலும், ஸ்மார்ட் கிரியே ஷன்ஸ் நிறுவனத்தின் வழக்குரைஞர் பிரதீப், தங்களுக்கு வெறும் செப்புத் தகடுகள் மட்டுமே வழங்கப் பட்டதாக நீதிமன்றத்திலும் வெளி யிலும் கூறியிருந்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வழக்குரைஞரை, தேவஸம் போர்டின் வழக்குரைஞராக அய்க்கிய ஜன நாயக முன்னணி (யுடிஎப்) அரசு நியமித்துள்ளது.
இதில் வழக்கமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. வழக்கமான நடைமுறைகளின்படி, அரசு தலைமை வழக்குரைஞர் ஒரு பரிந்துரையைச் செய்து, அதைச் சட்டத் துறைக்கு அனுப்பி, முதலமைச்சரிடம் கொடுப்பார்.
முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பிறகு, அது அமைச்சரவைக்குச் செல்லும். இங்கு இந்த நடை முறைகள் பின்பற்றப்பட்டதா? இந்த நியமனத்தில் ஏன் இவ்வளவு அவசரம்? ஏன் இவ்வளவு அவசரமாக இந்த நியமனம் செய்யப்பட்டது? அந்த பதவி விலகியதால், எல்லாம் முடிந்து விட்டது என்று கருத முடி யாது.
அரசியல் ஆலோசனை நடத்தப்படவில்லை!
பிரதீப் என்ன கோப்புகளைப் பெற் றார், தனது குறுகிய பதவிக்காலத் தில் அவர் என்ன செய்தார் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். இந்த நியமனத்தை முதலமைச் சர் செய்ததாகவும், அதுபற்றி தனக்குத் தெரியாது என்றும் தேவசம் அமைச்சர் கூறியுள்ளார். இதுபோன்ற விஷயங்களில் எந்த அரசியல் ஆலோசனையும் நடத்தப் படவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.
நியமனம் பெற்ற வழக்குரைஞரின் பதவி விலகலோடு எல்லாம் முடிந்துவிட்டது என்று கருத முடியாது. அவர் தேவசம் வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட தருணத்திலிருந்து என்னென்ன ஆவணங்கள் அவர் கைக்கு வந்தன என்பது இந்த வழக்கில் மிகவும் முக்கியமானது.
தேவசம் துறை அவர் கையில் உள்ள முக்கி யத் தகவல் வழக்குரைஞரைச் சென்றடைந்துள்ளதா? இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்த வழக்குரைஞர் கையில் ஏதே னும் ஆவணங்கள் இருந்தால், அவை கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என பினராயி விஜயன் கோரிக்கை விடுத்தார்.
