ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. மாணவரணி கண்டன ஆர்ப்பாட்டம்!
சென்னை, ஜூன் 24 – ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, சென்னையில் தி.மு.க. மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் அய்ந்தாயிரத்திற்கும் மேற் பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பாசிச பா.ஜ.க. அரசால் இந்தியா முழுவதும் திணிக்கப் பட்ட ‘நீட்’ தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் மோசடிகள் முறை கேடுகள் அம்பலப்பட்டு வருகின்றன.
திமுக ஆட்சியில் ‘நீட்’ தேர்வில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த ஆண்டு நடைபெற்ற ‘நீட்’ தேர்வு இரத்து செய்யப்படுவதாக அறிவித்ததிலிருந்து மறு தேர்வு அச்சத்தால் இந்தியா முழுவதும் 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு செத்து மடி கின்றனர். இது பாசிச மோடி அரசால் நிகழ்த்தப் படும் பச்சைப் படுகொலையாகும்.
இத்தகைய நுழைவுத் தேர்வு களையும் ‘தகுதி’த் தேர்வுகளையும் இரத்து செய்யக் கோரி பாசிச மோடி அரசினை தி.மு.கழகம் தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறது. அதேபோல் ஒன்றிய பா.ஜ.க. அரசு மொழிவாரி மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதிலும், தாய்மொழியைத் துறக்கச் செய்து, ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளை மக்களிடையே திணித்து அவர்களை இரண்டாந் தரக் குடிமக்களாக ஆக்கும் சதிச் செயலில் ஈடுபட்டு வருகிறது. 2014–ஆம் ஆண்டு ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததிலிருந்தே, தமிழ்நாட்டில் வடமொழித் திணிப்பை கல்வி நிலையங் களில் பாடத்திட்டம் வழி யாகவும் இதர பல்வேறு வகைகளிலும் செய்து வருகிறது.
தி.மு.க. தலைவர்
மு.க.ஸ்டாலின் கண்டிப்பு
மு.க.ஸ்டாலின் கண்டிப்பு
தற்போது ஒன்றிய அரசுப் பள்ளிகளில் (CBSE) 9–ஆம் வகுப்பிலிருந்து 12–ஆம் வகுப்புவரை சமஸ் கிருத மொழியைக்கற்க வேண்டும் எனும் திட் டத்தைச்செயல்படுத்திட ஒன்றிய மனிதவளமேம்பாட்டுத் துறை ஆணை பிறப்பித்துள்ளது.
இதனைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலை வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வன்மை யாகக் கண்டித் திருக்கிறார்.
எனவே, ஒன்றிய அரசின் இம்முயற்சிகளை தடுத்திட, தி.மு.க. தலைவரின் அறிவுறுத்தலின்படி பா.ஜ.க. அரசின் ‘நீட்’ தேர்வு மற்றும் ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பை கண்டிக்கும் வகை யிலும், அவற்றை ரத்து செய்ய வலியுறுத்தியும் தலைநகராம் சென்னை மாநகர், சைதையில் “கலைஞர் பொன்விழா வளைவு” அருகில், நேற்று (23.6.2026) காலை 9.00 மணியளவில், தி.மு.க. மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
5000 மாணவர்கள் பங்கேற்பு
மாணவர் அணி செயலா ளர் ஜெ.வீரமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. துணை பொதுச் செய லாளர் ஆ.ராசா எம்.பி., மாவட்டச் செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், நே.சிற்றரசு, மாதவரம் எஸ்.சுதர்சனம், திமுகஅமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை அமைப்பு செயலாளர் தாயகம் கவி உள்ளிட்டோர்கலந்து கொண்டனர். கருப்பு நிற டிஷர்ட் அணிந்து 5 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்று கல்வியை காவிமயமாக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
தி.மு.க. மாணவர் அணி துணை செயலாளர்கள் மன்னை சோழராஜன், தமிழரசன், செந்தில்குமார், தமிழ் கா.அமுதரசன், ஆனந்த், கோகுல், பூரண சங்கீதா சின்ன முத்து, ராமகிருஷ்ணன், சுரேஷ் குமார் ஆகியோர் இந்தப் போராட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். போராட்டத்தின் போது, நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் படங் களுக்கு, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
