கலைஞரின் 103ஆவது பிறந்த நாளை யொட்டி மதுரை மாவட்டக் கழக காப்பாளர் சே.முனியசாமி அவர்கள் தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் படங்களுடன் பள்ளி மாணவர்களுக்கு 2000 குறிப்பேடுகளை அச்சிட்டுள்ளார். முதல் கட்டமாக மதுரை வலையங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 210 மாணவர்களுக்கு குறிப்பேடுகளை இலவசமாக வழங்கியுள்ளார். உடன் வழக்குரைஞர் இராம.வைரமுத்து, திமுகவைச் சேர்ந்த முருகன், முனியசாமியின் பெயரன் பெரியார் செல்வன் மற்றும் தோழர்கள் உள்ளனர்.
மாணவர்களுக்கு குறிப்பேடு
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
