மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திராவிடர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்!

1 Min Read

குத்தாலம், ஜூன் 15– மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருந்து நிலையம் அருகில்  08-06-2025 அன்று மாலை திராவிடர் எழுச்சி நாள் முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆவது பிறந்தநாள் மற்றும் அன்னை நாகம் மையாரின் 94ஆவது நினைவுநாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

குத்தாலம் நகர கழகத் தலைவர் சா. ஜெகதீசன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். மாவட்ட கழக காப்பாளர் கொக்கூர் சா. முருகையன், மாவட்ட துணைத்தலைவர் ஞான.வள்ளுவன், திமுக பகுத்தறிவு கலை இலக்கியப் பேரவை ஒன்றியத் தலைவர் க.கலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கு. இளமாறன் வரவேற்புரையாற்றினார்.

திராவிடர் கழகம்

திராவிட முன்னேற்றக் கழக செயல்திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான குத்தாலம் பி.கல்யாணம் தொடக்க உரையாற்றினார. மாவட்ட கழகத் தலைவர் கடவாசல் குணசேகரன் அன்னை நாகம்மையாரின் தியாக வாழ்வு குறித்தும் அவர் மறைவின்போது தந்தை பெரியார் விடுத்த இரங்கல் உரை குறித்தும் பேசியது அனைவரின் நெஞ்சினையும் உருக்கும் வண்ணமிருந்தது.

நிறைவாக சிறப்புரை யாற்றிய கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி கலைஞரின் ஆற்றல், திறமை, சாத னைகள் குறித்து எழுச்சி மிகுந்த உரையாற்றினார்.

கூட்டத்தில் மயிலாடுதுறை நகர தலைவர் சீனி.முத்து, செயலாளர் பூ.சி.காமராஜ் ஒன்றியத் தலைவர் அ.சாமிதுரை, சீர்காழி ஒன்றியத் தலைவர் ச. சந்திரசேகரன், செயலாளர் ச.செல்வம், கொள்ளிடம் ஒன்றியச் செயலாளர் பூ. பாண்டுரங்கன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரெ.செல்லதுரை, விவசாய அணித்தலைவர் கொக்கூர் கு.இளஞ்செழியன் மற்றும் திமுக இளைஞரணித் தோழர்கள் ஜெ.கலை யரசன், நித்திஷ், க.அருண், எஸ்.கார்த்தி, எஸ்.ஜெயச்சந்திரன், ஆர்.சீனு, கோ.இளஞ்சேரன், கொக்கூர் எஸ்.மாதவன், அ.நாகராஜ், பிரதாப், கார்த்திகேயன், மற்றும் தோழர்கள், பொதுமக்கள்  திரளாக கலந்து கொண் டனர்.

அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. குத்தாலம் ஒன்றிய திரா விடர் கழகச் செயலாளர் தி.சபாபதி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *