திண்டுக்கல், வட்டச்சாலையில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்த நாள் விழா

1 Min Read

திண்டுக்கல், ஜூன் 15– முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்த நாள் விழா, திராவிடர் எழுச்சி நாள் பரப்புரைக் கூட்டம் 08.06.2026 திங்கள் கிழமை மாலை 6.00 மணிக்கு திண்டுக்கல், வட்டச்சாலை, ஆவின் பாலகம் அருகில் மிகுந்த எழுச்சியுடன் நடை பெற்றது.

மாநகரத் தலைவர் அ.மாணிக்கம் தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் தி.க.செல்வம் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் இரா. வீரபாண்டியன், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன், மாவட்ட துணைத்தலைவர் த.கரு ணாநிதி, நத்தம் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.பி.செல்லம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழகம்

திண்டுக்கல் மாநக ராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ச.இராஜப்பா, பகுதிச் செயலாளர் இராஜேந்திர குமார் ஆகியோரின் உரையினைத் தொடர்ந்து, திராவிட மாணவர் கழக இணைச் செயலாளர் மு.இளமாறன், மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் ஆகியோர் முத்தமிழறிஞர் கலைஞரின் பெண்களுக்கு கல்வி, இட ஒதுக்கீடு, சொத்துரிமை, மாற்றுத் திறனாளிகளுக்கான நலவாரியம், திருநங்கை களுக்கு தனி நலவாரியம், இட ஒதுக்கீடு, இளைஞர் களுக்கு டைடல் பார்க், அனைத்து ஜாதி யினரும் ஏற்றத் தாழ்வு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சமத்துவபுரங்கள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுச் சாதனைகளை பட்டியலிட்டு உரையாற்றி னர்.

திண்டுக்கல் மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் ஜான் பீட்டர், வைகை சித்திக், அருள்வாணி, கழக பொதுக்குழு உறுப்பினர் க.சதாசிவன், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா. சக்தி சரவணன், வத்தலக்குண்டு சுந்தர், நிலவை ஆர்.கே.பாபு, வி.இராமசாமி, கோ. சரவணன் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர் களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். எஸ்.செபாஸ்டின் சின்னப்பன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *