நாட்டைப் பாசிசத்தை நோக்கித் தள்ளும் ஒன்றிய பா.ஜ.க. அரசு; சி.பி.அய் கண்டனம்!

1 Min Read

சென்னை, மே 29- பினராயி விஜயன் இல்லத்தில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

“இந்தியாவை பாசிசத்தை நோக்கித் தள்ளும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் வழி நடத்தப்படும் ஒன்றிய பாஜக அரசு, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு அமைப்பு, வருமானவரித்துறை, நீதி மன்றங்கள் போன்றவற்றை தனது அரசியல் நோக்கங்களுடன் கூடிய தனது கட்டளைகளுக்கு அடிபணியும் அமைப்புகளாக மாற்றியுள்ளது. அந்த அமைப்புகளை எதிர்கட்சித் தலைவர்களை பழிவாங்கும் நோக்குடன், மிரட்டி – உருட்டி பணியவைக்கும் நோக்குடன் ஒன்றிய பாஜக அரசு பயன்படுத்துகிறது.

அதே சமயம் எந்த பாஜக தலைவர்கள் வீட்டிலும் ரெய்டுகள் நடத்தப்படுவதில்லை. ரெய்டுகளுக்கு உள்ளான எதிர்கட்சித் தலைவர்கள் பாஜகவில் சேர்ந்து விட்டால் அவர்கள் மீது எந்த தொடர் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை. ஒன்றிய அரசின் இத்தகையப் போக்கு நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தின் விழுமியங்களையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறது.

ஒன்றிய அரசின் இத்தகைய போக்கையும், கேரள மாநலத்தின் முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களின் இல்லங்கள் மீதான அமலாக்கத் துறையின் ரெய்டுகளையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது” என்று மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *