கல்வித் துறையில் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

2 Min Read

    மதுரை, ஜூன் 15 மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று (14.6.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம்  அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:

காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்

“கல்வித்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் முறைப்படி மற்றும் விரைவாக நிரப்பப்படும். பள்ளிகளில் மதம் சார்ந்த அடையாளங்கள் குறித்து எழுந்த விவாதம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில் வெளியில் இருந்து ஜாதிய மோதல்களைத் தூண்டிவிட முயற்சிக்கிறார்கள், அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

பள்ளிகளில் ஏற்ெகனவே என்ன நடைமுறை இருந்ததோ, அதுவே தொடர்ந்து நீடிக்கும். நானே விபூதி, குங்குமம் அணிந்துதான் பள்ளிக்குச் சென்றேன், அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. மேலும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் தற்போது தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்ந்துள்ளது, இதனை இன்னும் அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் அமைச்சரிடம், “முதலமைச்சர் ஜோசப் விஜய் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதில்லையே? என்று கேட்டபோது ‘‘எல்லாவற்றையும் எதிர்மறை எண்ணத்தோடு அணுக வேண்டாம்’’ என்று கேட்டுக்கொண்டார்.

 

ஆந்திர விவசாயிகள்
 மோட்டார் மூலம் நீர் திருட்டு

கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் வரத்து குறைந்தது

தமிழ்நாடு

    சென்னை, ஜூன் 15 ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் நீர் வரத்து குறைந்து வருகிறது. இதற்கு ஆந்திர விவசாயிகள் மோட்டார் மூலம் நீரை உறிஞ்சுவதே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னையில் உள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு கங்கா நதிநீர் ஒப்பந்தப்படி 15 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். இதில் 3 டிஎம்சி சேதாரம் போக, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்.

இந்நிலையில் கண்டலேறு அணையில் 2ஆவது தவணை தண்ணீர் கடந்த மார்ச் மாத இறுதியில் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் 4 டிஎம்சி வரவேண்டிய தண்ணீர் 1 டிஎம்சி மட்டுமே வந்தது. இதனை தொடர்ந்து, மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட தண்ணீர் கண்டலேறுவில் இருந்து மீண்டும் வினாடிக்கு 1900 கன அடி வீதம் 10 நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்பட்டது, இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் கடந்து, தமிழ்நாடு எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைப்பாக்கம் ஜீரோ பாயிண்டிற்கு கடந்த 28ஆம் தேதி வந்தடைந்தது.

இந்த தண்ணீர் ஜீரோ பாயிண்டில் தொடக்கத்தில் வினாடிக்கு 50 கன அடியாக வந்தது. படிப்படியாக உயர்ந்து 5ஆம் தேதி 172 கன அடியும், கடந்த வாரம் 300 கன அடியாகவும் வந்த தண்ணீர், தற்போது 280 கன அடியாக குறைந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் குறைந்து வருகிறது. இதற்கு காரணம் ஆந்திர விவசாயிகள் நீரை மோட்டார் மூலம் உறிஞ்சி எடுப்பது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *