புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

ஓசூர், ஏப. 29– ஓசூரில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் சிவந்தி அருணாசலம் தலைமையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா ஒசூர் உள்வட்ட சாலையில் உள்ள தந்தை பெரியார் சதுக்கத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாரதிதாசன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் திராவிடர் கழக மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம், கவிஞர்கள் முருககுமரன், பாலாஜி, முத்துசாமி, தமிழ் தேச குடியரசு இயக்கம் மாவட்ட செயலாளர் விக்னேஷ், காமராஜர் கல்வி வளர்ச்சி சங்க நிறுவநர் சீனிவாசன், திமுக மாநகராட்சி சுகாதார குழு தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் கண்ணன், 35ஆவதுமு வார்டு செயலாளர் வடிவேல், எழுத்தாளர் கமலாலயன் ஆகியோர் புகழுரையாற்றினர். நிகழ்ச்சி முடிவில் தமிழியக்கம் மாவட்ட செயலாளர் மாணிக்கவாசகம் நன்றி தெரிவித்தார்.

நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த விழா நிகழ்ச்சி நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது.

திராவிடர்கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். புரட்சிக் கவிஞர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் சிறப்புரை யாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், கழக பொதுக்குழு உறுப்பினர் மு.இராச சேகர் பகுத்தறிவாளர்கழக கழக மாவட்டத் தலைவர் உ. சிவதாணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை வர வேற்புரையாற்றினார்.

திராவிடர் கழக இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், மாவட்ட கழக இளைஞரணி தலைவர் இரா.இராஜேஸ், கழகத் தோழர்கள் எ.ச. காந்தி, பா.சு.முத்து வைரவன், குமரிச் செல்வன், ச.ச.சத்யாராணி, பிரவீன்   உட்பட பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *