தமிழ்நாட்டில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை, கொலை, வன்முறை சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது : பிரேமலதா கண்டனம்

2 Min Read

சென்னை, மே 31 தமிழ்நாட்டில் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன் கொடுமை, கொலை, வன்முறை சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிரேமலதா கடும் கண்டனம் தெரி வித்துள்ளார்.

இது குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா நேற்று (30.5.2026) வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொலைகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.

சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை

சென்னையில் 16 வயது சிறுவ னுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக வடபழனி காவல் நிலைய தலைமைக் காவலர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவரே இத்தகைய குற்றச் செயலில் ஈடுபட்டதாக வெளியாகியுள்ள தகவல் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், சென்னையில் 61 வயது மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட் டுள்ளார். மரக்காணம் அருகே 11 வயது சிறுமி, 62 வயது முதியவரால் பாலி யல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டுள்ளார்.

மனிதநேயத்தை தலைகுனியச் செய்துள்ளது

இவை மனிதநேயத்தை தலைகுனியச் செய்துள்ளது. ஆலங்குளம் அருகே நடைபெற்ற திருமண வீட்டில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று புகுந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக வெட்டிய சம்பவம் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடலூர் மாவட்டம் வடலூர் அருகே மண்ணில் அரைகுறையாக புதைக்கப்பட்ட நிலையில் 30 வயது இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய சம்பவங்கள் தொடர்ச் சியாக நடைபெறுவது தமிழ்நாட்டு மக்களிடையே மிகுந்த வேதனையையும் பாதுகாப்பின்மையையும் உருவாக்கி யுள்ளது. குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பாக வாழும் சூழலை உறுதி செய்வது அரசின் முதன்மை பொறுப்பாகும். முதலமைச்சர் நேரடியாக இந்த விவகாரங்களில் கவனம் செலுத்தி, சட்டம் – ஒழுங்கை வலுப்படுத்தி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நிரந்தரமான தீர்வுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *