காவேரிப்பட்டணம், ஜூன் 14- கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஆணைப்படி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது 103ஆவது ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கரு நாடகா, மும்பை உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் 103 பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும் என்று ஆணையிட்டுள் ளதன் பேரில் காவேரிப்பட்டணம் காமராசர் பேருந்து நிலையத்தில் காவேரிப்பட்டணம் ஒன்றிய கழக சார்பில் 08/06/2026இல் முத்தமிழறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை கழக சார்பாக “திராவிடர் எழுச்சி நாளாக” நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையொட்டி நிகழ்விற்கு கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ. திரா விடமணி தலைமையில் காவேரிப்பட்ட ணத்தில் பொதுக்கூட்டம் நடை பெற்றது.
காவேரிப்பட்டணம் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் பெ.செல்வம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இந்த நிகழ்ச்சிக்கு காவேரிப் பட்டணம் ஒன்றிய திமுக செயலாளர்கள் மத்திய ஒன்றியம் தேங்காய் சி.சுப்பிரமணி, கிழக்கு ஒன்றியம் க.மகேந்திரன், மேற்கு ஒன்றியம் என்.சரவணன், நகரச் செயலாளர் ஜே.கே.எஸ்.பாபு, பேரூராட்சி மன்றத் தலைவர் அம்சவேணி செந்தில்குமார், மாவட்ட கழகச் செயலாளர் செ.பொன்முடி, மாவட்டத் துணைத்தலைவர் தி.கதிரவன், துணைச்செயலாளர் சி.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது;-
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச் சராக இருந்த சமயத்தில் தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களும் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல் படுத்தினார். அந்த திட்டங்களில் அனைத்தும் இன்றைக்கும் அவர் பெயர் கூறுவதாக உள்ளது. மேலும் நீதிக்கட்சி தலைவர்கள் தொடங்கி தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சியின் சாதனை சரித்திர நாயகர் முத்துவேல் கருணாநிதி மு.க.ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்களை அனைத்து தரப்பு மக்களும் பெற்று பயன டைந்துள்ளானர். அவரது மக்கள் நல திட்டங்களைபெறாத குடும்பங்களே இல்லை என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறி, தலைவர் கலைஞர் அவர்கள் நினைவைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளை திராவிடர் கழகம் சார்பாக “திராவிடர் எழுச்சி நாளாக” நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது என அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் திமுக பேரூர் கழகச் செயலாளர் ஜே கே எஸ் பாபு, ஒன்றிய கழகச் செயலாளர்கள் தேங்காய் சி.சுப்பிரமணி, மாவட்ட ப.க. தலைவர் கிருட்டினன், மாநில ப.க.துணைப்பொதுச்செயலாளர் அண்ணா. சரவணன் ஆகியோர் கலந்துக் கொண்டுப் பேசினர்.
மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம் இணைப்புரை வழங் கினார்.
கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் இல. ஆறுமுகம், மாவட்ட திமுக அமைப்புச்சாரா ஓட்டுநரணி துணை அமைப்பாளர் கே.எஸ்.செந்தில்குமார், திமுக பிரமுகர் கேபிள் டிவி சின்னசாமி, சுற்றுசூழல் அணி நிர்வாகி கி.கோவிந்தராஜி, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை நிர்வாகிகள் கா. பார்த்திபன், இரா.மோகன், ஒன்றியப் பொருளாளர் சூரியபிரகாஷ், சின்னராஜ், மணி, மேனாள் மாவட்ட கழக செயலாளர் கா.மாணிக்கம், மாவட்ட ப.க.துணைத்தலைவர் மு.வேடியப்பன், மாவட்ட ப.க. துணைச்செயலாளர் மா.சிவசங்கர், மாவட்ட இளைஞரணித் தலைவர் சீனிமுத்து. இராசேசன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வே.புகழேந்தி, துணைச் செயலாளர் பூ. இராசேந்திரபாபு, மாவட்ட மாணவர் கழகத் தலைவர் இர.அஜய்குமார், தொழிலா ளரணி மாவட்டத் தலைவர் சி.வெங்கடேசன், ஊற்றங்கரை ஒன்றியச் செயலாளர் செ.சிவராஜ், துணைத் தலைவர் காரப்பட்டு ப.இரமேசு, புலியாண்டியூர் சி.இராசா, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் மா.சிவசக்தி, இராமாபுரம் கிளை மு.இரஞ்சித், மு.புகழேந்தி, பையூர் கிளை வி.சரவணன்,போச்சம்பள்ளி கா.ஞானசேகரன், ஞா.சரவணன் ஞா.சுதன், தி.அ.அனலரசு, தி.அ.அறிவுக்கனல் உள்ளிட்ட தி.க., திமுக நிர்வாகிகள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
நிறைவாக காவேரிப்பட்டணம் ஒன்றிய கழகச் செயலாளர் பெ.செல்வேந்திரன் நன்றி கூறினார்.
