மின் பகிர்மான அமைப்பில் தொழில்நுட்பச் சவால்கள் மின்வாரியத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்

பொன்னேரி, ஜூன் 14- திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி அருகே உள்ள மேலூர், பஞ்செட்டி ஆகிய 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் மற்றும் இருளிப்பட்டுவில் உள்ள 33 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் என, 3 துணை மின் நிலையங்களில் நேற்று (13.6.2026) தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

துணை மின் நிலையங்களின் செயல்பாடு, பராமரிப்பு பணிகள், மின் தடையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், தடையற்ற மின்சாரம் வழங்குதல், பழுதுகளை விரை வாகக் கண்டறிந்து சரி செய்தல் மற்றும் நுகர்வோர் சேவை வழங்கலை மேம்படுத்துதல் ஆகியவை தொடர்பாக சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறி வுறுத்தல்களை வழங்கினார்.

பஞ்செட்டி 110 கிலோ வோல்ட் துணை மின்நிலைய வளாகத்தில் ரூ.256.45 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 230/110 கிலோ வோல்ட் துணை மின் நிலைய கட்டுமானப் பணியின் இறுதிக் கட்டப் பணிகளை ஆய்வு செய்தார். பிறகு, அலமாதி துணை மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், பாடியநல்லூர் பகுதியில் புதைவட கேபிள் பழுது நீக்கும் பணி, ஆவடி துணை மின் நிலையத்தை ரூ.102 கோடி மதிப்பீட் டில் 230/110 கிலோ வோல்ட் துணை மின் நிலையமாக தரம் உயர்த்தும் பணி ஆகியவற்றை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின் போது, பஞ்செட்டியில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: பஞ்செட்டி 230/110 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைக்கும் பணியில் 95 சதவீதம் முடிவுற்றுள்ளது. மீத முள்ள பணிகளை விரைந்து முடித்து, இன்னும் ஓரிரு மாதங் களில் துணை மின் நிலையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இந்த துணை மின் நிலையத்தின் பணிகள் நிறைவடைந்ததும், கும்மிடிப்பூண்டி சிப்காட், தேர்வாய் கண்டிகை, சோத்துப் பெரும்பேடு, பஞ்செட்டி, பொன்னேரி, மேலூர், அலமாதி மற்றும் பெரிய பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு 110 கிலோ வோல்ட் துணை நிலையங்களுக்கு மின்சாரம் வழங்கப்படும்.

தற்போது கோடை காலம் என்பதால், இரவு நேரங்களில் மின் பயன்பாடு அதிகரிப்பதால், மின் பகிர்மான அமைப்பில் சில தொழில்நுட்பச் சவால்கள் ஏற்படுகின்றன. சென்னையில் 38 லட்சம் மின் நுகர்வோர் உள்ளனர். இவ்வளவு பெரிய வலையமைப்பில் சில பகுதிகளில் மின் மாற்றிகள் மற்றும் துணை மின் நிலையங்கள் அதிக சுமையைச் சந்திப்பதால், ஃபியூஸ் பழுதடைதல், கேபிள் கோளாறுகள் மற்றும் பிற தொழில் நுட்பப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் தற்காலிக மின் தடை நிகழ்கின்றன. ஆகவே, பிரச்சினைகள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *